மேள தளத்துடன் சேலம் திரும்பிய நடராஜனை 14 நாட்கள் வீட்டுக்காவலில் வைத்த ஊராட்சி நிர்வாகம் – காரணம் இதுதான்

Nattu
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உலகில் பல முன்னணி வீரர்களை தனது பந்து வீச்சில் வீழ்த்திய நடராஜன் ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வானார். முதலில் டி20 தொடரில் இடம் பெற்று இருந்த தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் டி20 அணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் ஒருநாள் தொடரிலும் சைனிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இடம் பிடித்த அவர் தனது முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின்னர் நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் விளையாடி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

nattu 2

- Advertisement -

இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் நெட் பவுலராக இணைந்தார். அதன்பின்னர் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடினார். இந்த போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

மேலும் இந்திய கேப்டன் ரகானே கோப்பையை கையில் வாங்கியதும் நடராஜனிடம் கொடுத்து மகிழ்ந்ததை நாம் கண்டோம். இந்நிலையில் இத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நடராஜனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய அணியில் இருந்த நடராஜன் பெங்களூர் வந்து அங்கிருந்து கார் மூலமாக சேலம் திரும்பினார்.’

Nattu

தனது சொந்த ஊர் சின்னப்பம்பட்டி திரும்ப இருந்த நடராஜனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி அவரை பாராட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டது. சாரட் வண்டி கொண்டுவரப்பட்டு மேளதாளங்களுடன் அவர் ஊருக்குள் வந்தார். இருப்பினும் அவருக்கு போடப்பட்ட மேடையை ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

- Advertisement -

ஏனெனில் வெளிநாடு இருந்து நாடு திரும்பிய நடராஜனை இது போன்ற பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் சந்திக்க கூடாது எனவும் கொரோனா பரிசோதனையை நடராஜன் செய்துகொண்டதால் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக அவரை 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் ஊர் மக்கள் அவரை ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Nattu

ஆனால் நடராஜன் பங்கேற்ற இந்த அழைப்பு விழாவில் யாரும் நடராஜனிடம் கை கொடுக்கவும் கட்டியணைக்கும் கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவு போடப்பட்டு இருந்தது. மக்களின் சிறப்பான வரவேற்பினை பெற்ற நடராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement