தனது வாழ்நாள் கனவு விக்கெட்டை சி.எஸ்.கே அணிக்கு எதிராக எடுத்து அசத்திய நடராஜன் – சூப்பர் தகவல் இதோ

Nattu-2

ஐபிஎல் தொடரின் 29 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான தன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

cskvssrh

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் குவித்தனர். துவக்க வீரராக களமிறங்கிய சாம் கரன் 31 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பாக வில்லியம்சன் மட்டும் சிறப்பாக விளையாடி 57 ரன்களை குவித்தார். ஜடேஜா பேட்டிங்கில் 10 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் குவித்தார். பவுலிங்கிலும் 3 ஓவர் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அதனால் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

nattu

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக வீரரும் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் நடைபெற்ற உரையாடலில் சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த தமிழக வீரரான நடராஜன் கலந்து கொண்டார். அதில் உன்னுடைய கனவு விக்கெட் யாரென்று அஸ்வின் கேட்க சிரித்தபடி நிச்சயம் தோனி உடைய விக்கெட் தான் எனது கனவு விக்கெட் என்று நடராஜன் கூறியிருந்தார்.

- Advertisement -

nattu 1

மேலும் அவரது விக்கெட்டை வீழ்த்துவது எனது வாழ்நாள் சாதனை எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று நடந்த போட்டியில் பிரமாண்ட சிக்சரை பறக்க விட்ட தோனி அடுத்த பந்திலேயே அவரது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கு அஸ்வினும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். தோனியின் விக்கெட் மூலம் அவரது கனவு நினைவானது குறிப்பிடத்தக்கது.