ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 16 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம் பிடித்தார். இதில் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இருப்பினும் இவர் டெஸ்ட் போட்டியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பிட்டு தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கி வருகிறார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் விடைப்பெறுவதாக கூறியுள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டிக்காக முன்னதாக பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் மற்றும் நடராஜனும் இவர்களுடன் இணைந்து வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது நடராஜன் விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகியோருக்கு பந்து வீசினார். வெறித்தனமாக பந்துவீசிய நடராஜன் விராட் கோலியை அலறவிட்டார். அதுமட்டுமின்றி டெஸ்ட் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானேவும் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டனர்.
அதுமட்டுமின்றி இவர்கள் எதிர்கொண்ட நடராஜனின் பந்துகள் பெரும்பாலும் கண்டிப்பாக கேட்சாகியிருக்கும் இல்லையென்றால் எல்பிடபிள்யூ ஆகிருக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது. நடராஜனின் வலைப்பயிற்சியை கண்டு இந்திய அணி நிர்வாகமே திகைத்துப் போனதாக கூறப்படுகிறது. இதனால் டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் யாருக்காவுது காயம் ஏற்பட்டால் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய அணியின் பேக்அப் பந்துவீச்சாளராக இருந்து வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான நடராஜன் டெஸ்ட் அணியிலும் பேக்அப் பவுலராக அறிவிக்கப்பட்டால் ஏதேனும் ஓரு வீரருக்கு காயம் ஏற்படுமாயின் அவருக்கு டெஸ்ட் அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.