வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக 11 ஆடும் ஒரே ஒரு டி20 போட்டி கடந்த வியாழக்கிழமை (மே 31 ) இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில்,பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசர் ஹுசைன் செய்த செயல் அனைவரயும் எரிச்சலடைய செய்துள்ளது.
Nasser Hussain, on commentary, at first slip for the opening over. This is why these games – wonderful as they are – should never have international status. #WIvRoW pic.twitter.com/T3caRzOEEA
— Adam Collins (@collinsadam) May 31, 2018
கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்ட இர்மா மற்றும் மரியா என்ற இரு புயல்களால் அந்த நாட்டில் இருந்த 5 மைதானங்களை சேதமடைந்தது. எனவே பழுதடைந்த மைதானங்களை சீர் செய்ய மேற்கிந்திய அணி இங்கிலாந்து அணியுடன் சேர்ந்து ஒரே ஒரு t20 போட்டியை நடத்த முடிவு செய்தது.
மேலும் இந்த போட்டியின் மூலம் வரும் பணத்தை வைத்து மைதானங்களை சீர் செய்ய முடிவு செய்தது. இதற்கு ஆதரவு தந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்தது.இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 20 ஓவர் முடிவில் 199 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய உலக 11 அணி 127 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த போட்டியின் நடுவே வர்ணனை செய்துகொண்டிருந்த நாசர் மைதானத்தின் உள்ளே சென்று வர்ணனை செய்தார். ஒருகட்டத்தில் கீப்பிங் செய்து கொண்டிருந்தவர் அருகில் நின்று கொண்டு வர்ணனையை செய்தார் நாசர். இவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றானர். போட்டி நடக்கும் போது இவ்வாறு செய்யலாமா என்று அனைவரும் இவரது அதிகபிரசங்கி தனத்தை விமர்சித்து வருகின்றனர்.