டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் பல சாதனைகளை இவர் முறியடிப்பார் – நாசர் ஹுசேன் உறுதி

Nasser-1
- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் தனது சிறப்பான பேட்டிங் மூலம் தற்போது டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனுக்கான தர வரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். 30 வயதான ஜோ ரூட் சமீபத்தில் இலங்கை பயணத்தின்போது முதல் டெஸ்ட் போட்டியில் 228 ரன்னும், 2-வது டெஸ்ட் போட்டியில் 186 ரன்னும் குவித்தார். இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற அவரது பேட்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது.

root 1

- Advertisement -

தற்போது இந்திய பயணத்தின்போது சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ஜோரூட்டின் அபாரமான பேட்டிங்தான் முழு முக்கிய காரணம். அவர் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (218 ரன்) அடித்தார். 2-வது இன்னிங்சில் 40 ரன் அடித்தார்.
வருங்காலத்தில் இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜோ ரூட் திகழ்வார் , குக்கின் சாதனையையும் அவர் எளிதில் முறியடிப்பார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் : வருங்காலங்களில் இங்கிலாந்திற்கு சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஜோரூட் கட்டாயம் திகழ்வார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். தற்பொழுது அவருக்கு 30 வயதுதான் ஆகிறது. இதனால் இங்கிலாந்தின் அனைத்து சாதனைகளையும் அவர் கட்டாயம் முறியடிப்பார். டெஸ்டில் அதிக ரன் எடுத்த அலைஸ்டர் குக்கின் சாதனையை வருங்காலங்களில் முறியடிப்பார். நான் பார்த்த வகையில் ஜோரூட்டை போல் எந்தவொரு இங்கிலாந்து வீரரும் சுழற்பந்தை எதிர் கொள்வதில்லை.

root 2

ஜோரூட் சுழற்பந்தை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு மிக அபாரமாக விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து தோற்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் சில ரசிகர்களும் கூறினார்கள். அந்த கணிப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் ஜோரூட் தலைமையிலான அணி முதல் டெஸ்டில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Root

தற்பொழுது டெஸ்டில் அதிக ரனகள் எடுத்த இங்கிலாந்து வீரர்களில பட்டியலில் ஜோரூட் 3-வது இடத்தில் உள்ளார். அவர இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,507 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 50.33 ஆகும். அதில் 20 சதமும் 49 அரை சதமும் அடித்து தனது கைவசம் வைத்துள்ளார். அலஸ்டர் குக் 12,472 ரன்னுடன் (161 டெஸ்ட்) முதல் இடத்திலும், கிரகாம் கூச் 8,900 ரன்னுடன் (118 டெஸ்ட்) 2-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement