சர்வதேச அரங்கில் முதன்மை அணியாக திகழும் இந்தியா கிரிக்கெட்டின் உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பை கொடுத்து தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக இருந்த இந்தியாவை 2016 – 2021 தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திரம் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.
இருப்பினும் அவர் பதவி விலகிய பின் 2022இல் இங்கிலாந்துக்கு எதிராக ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியிலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. பொதுவாகவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் 3 முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுடன் 4வது பவுலர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண முடியும். அப்படி ஒரு ஆல் ரவுண்டர் கிடைக்காமலேயே இந்தியா நீண்ட காலமாக தடுமாறி வருகிறது என்றே சொல்லலாம்.
ஒரு பிளேயர் மிஸ்:
குறிப்பாக உலகமே வியக்கும் அளவுக்கு சாதனைகளை படைத்த ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் இர்பான் பதான், ஸ்டுவர்ட் பின்னி போன்றவர்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் நீண்ட காலமாக அசத்த முடியாமல் வெளியேறினார்கள். அந்த வரிசையில் கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்திய ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் விமர்சனத்தை நாட்டிங்கம் போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்து பொய்யாக்கினார்.
அதனால் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மகிழ்ந்த போதிலும் 2019க்குப்பின் காயத்தை சந்தித்த அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் போல இந்திய அணியில் பாண்டியா போன்ற வீரர் இல்லாததே வெளிநாடுகளில் தடுமாறுவதற்கான காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“இந்தியா சொந்த மண்ணில் மிகச் சிறந்த கலவை மற்றும் பேலன்ஸ் கொண்டிருப்பதால் அபாரமாக செயல்படுகிறது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் 6 – 7வது இடத்தில் பேட்டிங் செய்து ஸ்விங் பந்துகளை வீசும் வீரர் இல்லை. அதாவது லேசாக பேட்டிங் செய்யும் பவுலர் அல்லாமல் முழுமையாக பேட்டிங் செய்து 10 – 20 ஓவர்களை வீசும் வீரர் அவர்களிடம் இல்லை. அதுவே சொந்த மண்ணுக்கு வெளியே இந்தியாவை தடுமாற வைக்கிறது”
“ஏனெனில் அவர்களிடம் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் சுப்மன் கில் போன்ற வருங்கால சூப்பர் ஸ்டார்களும் இருக்கின்றனர். ஆனாலும் வெளிநாட்டு மண்ணில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருந்தால் தான் இந்தியா பேலன்ஸ் நிறைந்த அணியாக மாறும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா முழுமையாக ஃபிட்டாக விளையாடியிருந்தால் அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்தி தொடர்ந்து அசத்தியிருப்பார்”
இதையும் படிங்க:அவர டி20 பிளேயர்ன்னு மட்டும் நினைக்காதீங்க, மத்த ஃபார்மட்லயும் சான்ஸ் கொடுக்கலாம் – இளம் வீரரை பாராட்டிய அபினவ் முகுந்த்
“அதே போல ஜஸ்பிரித் பும்ரா கம்பேக் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். காயங்கள் எதுவுமில்லாத போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அளவுக்கு அவர் மிகச்சிறந்த பவுலர். எனவே இது போன்ற சீனியர் மற்றும் இளம் வீரர்களுடன் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 ஆல் ரவுண்டர்கள் இருப்பது சொந்த மண்ணில் இந்தியாவை மிகவும் வலுவான அணியாக காட்சிப்படுத்துகிறது. ஏனெனில் 7வது அவர்களுடைய அணியில் ஒரு பேட்ஸ்மேன் விளையாடுகிறார்” என்று கூறினார். முன்னதாக