கோலி மட்டுமல்ல இவரோடு சேர்ந்து இனி 5 பேர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் – நாசர் ஹுசேன் கருத்து

hussain

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல தடைகளைக் கடந்து தற்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பெரும்பகுதி மழையால் தடைபட்டது.

pak

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இங்கிலாந்து மைதானங்களில் வேதத்திற்கும், ஸ்விங்கிற்கும் குறைவில்லாமல் இருக்கும் இந்த பிட்சில் கூட அவர் சிறப்பாக விளையாடி 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் அவரது ஆட்டம் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான நாசர் உசேன் கூறுகையில் : விராட் கோலி இதுபோன்ற ஒரு ஆட்டத்தில் விளையாடி இருந்தால் ஒவ்வொருவரும் பேசியிருப்பார்கள். ஆனார் பாபர் அசாம் என்பதால் யாரும் அவரைப் பற்றி பேசுவதில்லை.

Azam

பாபர் அசாம் ஒரு இளம் வீரர் அவர் நிச்சயம் திறமையான நேர்த்தியான வீரர் அனைத்து ஷாட்களையும் விளையாடும் ஆக்ரோஷத்தை பெற்றுள்ளார். இனிமேல் இந்த காலகட்டத்தில் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் 4 பேர் அல்ல அவருடன் சேர்த்து சிறப்பான வீரர்கள் ஐந்து பேர் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நாசர் உசேன் தெரிவித்த அந்த நான்கு பேர் யார் எனில் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், விராட் கோலி ஆகியோருடன் சேர்த்து ஐந்தாவதாக இவரையும் அந்தப் பட்டியலில் இவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.