சச்சின், ஏபிடி, சங்ககாராவை விட விராட் கோலி அதுல சிறந்த பேட்ஸ்மேன்.. மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன்

Micheal Atherton
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது.

அந்தப் போட்டியில் 242 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்காக நங்கூரமாக விளையாடிய விராட் கோலி சதத்தை அடித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் கருத்தை வென்றார். சமீபத்திய தொடர்களில் தடுமாற்றமாக விளையாடிய அவர் தமக்கு பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின், சங்ககாராவை முந்தி வேகமாக 14000 ரன்கள் அடித்த வீரராகவும் உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

சிறந்த கோலி:

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின், ஏபி டீ வில்லியர்ஸ், சங்ககாரா ஆகியோரை விட விராட் கோலி மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் 50 ஓவர் கிரிக்கெட்டில் சேசிங் செய்வதில் விராட் கோலியை விட சிறந்தவர் இல்லை”

“அவர் 51 சதங்கள் அடித்துள்ளார் என்பது நம்ப முடியாதது. அதே போல 140000 ரன்களை கடந்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கர், சங்ககாரா ஆகியோருக்கு பின் இருக்கிறார். அவர் அதை சச்சினை விட 60 இன்னிங்ஸ், குமாரை விட 90 இன்னிங்ஸ் குறைவாக எடுத்துள்ளார். விராட் கோலி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர். ஆனால் ஒருநாள் போட்டிகள் அவருடைய மிகவும் சிறந்த ஃபார்மட்” எனக் கூறினார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டின் கிங்:

அதே நிகழ்ச்சியில் நாசர் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “அற்புதமான வீரரான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல் டைம் பட்டியலில் சிறந்த வீரர். இதே விவாதத்தில் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககாரா, ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே மிகவும் சிறந்த வீரர்கள்”

இதையும் படிங்க: டேஞ்சரான ஜோடி.. இந்தியா கோப்பை வெல்ல வாய்ப்பிருக்கு.. அவர் அடுத்த சூப்பர்ஸ்டாரா வருவாரு.. ஹாசிம் அம்லா

“ஆனால் அந்த மரத்தின் பட்டியலில் விராட் கோலி மேலே இருப்பார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. செமி ஃபைனலுக்கு முன் உண்மையான போட்டியாக கருதப்படும் அந்தப் போட்டி வரும் மார்ச் இரண்டாம் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

Advertisement