இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. அதனால் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தோல்விகரமாக துவங்கியுள்ளது.
முன்னதாக ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் ஆரம்பத்திலேயே விமர்சனங்களை சந்தித்தார். ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கவில்லை. இருப்பினும் இத்தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
3 – 4 கேப்டன்கள்:
அத்துடன் கேப்டனாகவும் அவர் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார் என்றே சொல்லலாம். அதனால் ஒருவேளை பேட்டிங்கில் நன்றாக ஃபினிஷிங் செய்து தவற விடப்பட்ட 7 கேட்ச்களில் 4 பிடிக்கப்பட்டிருந்தால் கூட அவரது தலைமையில் இந்தியா வென்றிருக்கும் என்றால் மிகையாது. இந்நிலையில் ரோஹித், விராட் கோலி போல சுப்மன் கில்லிடம் இந்திய அணியை முழுமையாக கட்டுப்படுத்தும் பண்பை பார்க்க முடியவில்லை என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.
அனுபவமின்மை காரணமாக சுப்மன் கில் மட்டுமின்றி 3 – 4 வீரர்கள் இந்திய அணியை கட்டுப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி நாசர் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “லீட்ஸ் போட்டியில் இந்தியா 3 – 4 கேப்டன்களை கொண்டிருந்தது. ஆனால் அந்த நால்வரில் யாருமே சராசரிக்கு நிகராக இல்லை. சுப்மன் கில் வழியை மற்றொருவர் கண்டறிவதை நான் பார்த்தேன்”
கேப்டன்ஷிப் கமிட்டி:
“களத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஒளியை சுப்மன் கில் கொண்டிருக்கவில்லை. பந்தை பின் தொடர்ந்த அவர் செயலில் இருப்பதை விட அதிகமாக எதிர்வினை ஆற்றியதாக எனக்குத் தெரிந்தது. ரோகித், விராட் கேப்டனாக இருக்கும் போது களத்தைப் பார்த்தால் யார் இந்திய அணியை தலைமை தாங்குகிறார்கள் என்பது உங்களுக்கு உடனடியாகத் தெரியும்”
இதையும் படிங்க: தயவுசெய்து இந்த சேஷ்டை எல்லாம் செய்யாதீங்க.. ரிஷப் பண்டுக்கு அறிவுரை வழங்கிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
“ஆனால் தற்போதைய இந்திய அணியைப் பார்க்கும் போது 2 – 3 கேப்டன்கள் இருக்கிறார்கள். கேப்டன்ஷிப் என்பது ஒரு கமிட்டியால் நடத்தப்படுவது போல் இருக்கிறது” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



