இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியிருந்தும் தோல்வியை சந்தித்து இன்று தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த முதலாவது போட்டியில் இந்திய அணி சார்பாக 5 சதங்கள் அடிக்கப்பட்டாலும் கடைசி நாளில் 350 ரன்கள் வைத்து இங்கிலாந்து அணியை தடுத்து நிறுத்த முடியாமல் தோல்வியை சந்தித்தது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது.
ப்ளீஸ் இந்த செலிப்ரேஷன் உங்களுக்கு வேணாம் : அஷ்வின் அறிவுரை
இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 178 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 134 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் 140 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 118 ரன்களை குவித்திருந்தார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த பிறகு சம்மர் சால்ட் அடித்து தனது சதத்தை அவர் கொண்டாடியிருந்தார். அதன்பிறகு இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சதம் அடித்த போது மைதானத்தில் இருந்த முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் அவரை சமர் சால்ட் அடித்து கொண்டாடுமாறு கூறினார்.
ஆனால் அதனைத் தவிர்த்த பண்ட் அடுத்த சதத்தின் போது தான் அந்த செலிப்ரேஷனில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் பெரியளவு வைரலாகி இருந்தது. இந்நிலையில் சதமடித்த பிறகு இப்படி ஒரு செலிப்ரேஷன் வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
தயவு செய்து சம்மர் சால்ட் அடிக்காதீர்கள். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளின் போது நமது உடல் அதிகளவு சோர்ந்திருக்கும். டி20 போட்டிகளை பொருத்தவரை 50 முதல் 60 பந்துகளுக்கு மேல் நாம் சந்திக்க மாட்டோம் என்பதனால் பணிச்சுமை குறைவாக இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை பணிச்சுமை அதிகமாக இருக்கும். எனவே உடற்தகுதியை கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் சுட்டிக்காட்டி உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகப்பெரிய தொடர் என்பதினால் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே அஸ்வின் இந்த அறிவுரையை வழங்கி உள்ளார். மேலும் நாம் முழு உடற்தகுதியோடு இருக்கிறோம் என்பதை யாருக்கும் நிரூபிக்க வேண்டாம் என்பதனால் இது போன்ற செயல்கள் தவிர்க்குமாறும் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகம்.. என்ன ஆனது? – விவரம் இதோ
அதுமட்டும் இன்றி கெளதம் கம்பீரின் இடத்தில் நான் இருந்திருந்தால் ரிஷப் பண்ட்டை அழைத்து 130 ரன்கள் வரை அடித்தால் போதாது என்றும் 200 ரன்கள் அடிக்கும் வரை நீ களத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறுவேன் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



