சூதாட்ட பிரச்சனை. சிக்கிய பாக் வீரர் 17 மாதம் ஜெயில் தண்டனை – பாக் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு

Jamshed
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை போல பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்கனவே சூதாட்டப் புகார் காரணமாக பலர் சிக்கி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வீரர் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 17 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது பாக் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jamshed 1

- Advertisement -

அதன்படி 2017 மற்றும் 2018 ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் போட்டியில் வீரர்களுக்கு இடையே மேட்ச் பிக்சிங் செய்ய தூண்டியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் நசீர் ஜாம்ஷெட் குற்றம் சாட்டப்பட்டார். அவரது குற்றம் மேன்சிஸ்டர் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 17 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இருவரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரிட்டிஷ் கிரைம் பிரான்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில் ஜாம்ஷெட் கடந்த 2017 ஆம் ஆண்டு சூதாட்டப் புகாரில் சிக்கி ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருடன் யூசப் அன்வர் மற்றும் முகமது இசாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட அன்வர் மற்றும் இசாஜ் ஆகிய இருவரும் வீரர்களுக்கு பணம் கொடுத்து மோசடியாக விளையாட தூண்டினோம் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

jamshed 2

இதனால் இசாஜ்க்கு 40 மாதங்களும், அன்வருக்கு 30 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப் பட்டன அதனைத்தொடர்ந்து தான் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறிய நசீர் ஜாம்ஷெட் கடைசியில் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. நசீர் ஜாம்ஷெட் பாகிஸ்தான் அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 48 ஒருநாள் போட்டிகள் 18 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement