பிளஸ் 1 மாணவனை களமிறக்கி ஆஸ்திரேலிய அணியை மிரட்ட இருக்கும் பாகிஸ்தான் – என்ன இது புதுசா இருக்கு

Pak-1
- Advertisement -

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகர மைதானத்தில் துவங்குகிறது.

pak

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் நசிம் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவேளை அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனால் இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான தீர்வாக அமையும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

16 வயதை சேர்ந்த நசிம் ஷா வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2003ஆம் ஆண்டு பிறந்த இவர் முதல் தர போட்டிகளில் 5 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருவேளை இவர் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடினால் மிகச்சிறிய வயதில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

Naseem

மேலும் தற்போது அவருடைய வேகம் சுவிங்கம் சிறப்பாக உள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவில் கண்டிப்பாக நிச்சயம் சாதிக்கமுடியும் என்றும் சிறப்பாக பந்துவீச ,முடியும் என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தானில் அவரது வேகம் ஏகிறினாலும் ஆஸ்திரேலியாவில் எப்படி செயல்பட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

Advertisement