- Advertisement -
உலக கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியில் அந்த பிரச்னை இருப்பது உண்மைதான்.. எங்களுக்காக ஒரு ஆளை நியமியுங்க – நசீம் ஷா விசித்திர கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளாகவே பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக கூட சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை தழுவி அந்த தொடரின் லீக் சுற்றோடு வெளியேறியது.

அதேபோன்று கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பையில் கூட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறியது. இப்படி பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். மேலும் அணி வீரர்களிடம் ஒற்றுமையே இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் இந்த சரிவிற்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டு வரும் வேளையில் பாகிஸ்தான் அணியில் உள்ள பலருக்கும் ஆங்கிலத்தில் பேச சிரமம் இருப்பதாகவும் அதனால் வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் பேச தங்களது அணிக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் வேண்டும் என்றும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பயிற்சியாளர்களுடன் சொந்த மொழியில் பேச எளிமையாக இருக்கிறது. அதேவேளையில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருக்கும் போது அவர்களுடன் பேசுவது சிரமமாக இருக்கிறது. எனவே பயிற்சியாளர்கள் உடனான எங்களது உரையாடல்கள் முற்றிலும் புரியாமல் போகிறது. அதன்மூலம் எங்களது ஆட்டத்திறனும் பின்னைடவை சந்தித்துள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி தற்போது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் அதை எல்லாம் மறந்து நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நிச்சயமாக நகர்வோம். எங்களது ஆட்டம் முன்னேற்றத்தை காணாத வரை கடினமான வார்த்தைகளால் வரும் விமர்சனங்களை கேட்டுத்தான் ஆக வேண்டும்.

இதையும் படிங்க : ரசிகர்கள் அவர் மேல தோல்வி பழிபோடுவது சரியல்ல.. யார் இருப்பான்னு 2025க்குப்பின் தெரிஞ்சுடும்.. பசித் அலி

எங்களது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதிலும், புரிந்து கொள்வதிலும் சிரமம் இருக்கிறது. முன்னர் கூட பாகிஸ்தான் அணியில் இன்சமாம் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோருக்கு மட்டும் தான் நன்றாக ஆங்கிலம் தெரியும். அவர்களை தவிர்த்து நாங்கள் பலரும் ஹிந்தி அல்லது உருது மொழிகளில் தான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகிறோம் என நசீம் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -