இளம் வயதில் ஹாட்ரிக் சாதனை. பாக் வீரர் படைத்த சாதனை அய்யோ இப்படியா ? – விவரம் இதோ

Naseem
- Advertisement -

பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை புரிந்து உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணிக்காக முகமது ஷமி 2002 ஆம் ஆண்டு ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திய பிறகு தற்போது 18 வருடங்களுக்கு பிறகு நசிம் ஷா ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Naseem

- Advertisement -

ராவல்பிண்டியில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று நாளன்று இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதே சாதனையை வங்கதேச ஸ்பின்னர் அலோக் கபாலி 2003ம் ஆண்டு பெஷாவரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 19 வயதில் ஹாட்ரிக் சாதனை புதிய உலக சாதனை படைத்திருந்தார்.

அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பன் மைதானத்தில் தனது அறிமுக போட்டியில் விளையாடிய நசீம் ஷா பெரும் எதிர்பார்ப்புகள் இடையே சோபிக்காமல் போனார். ஆனால் தற்போது வங்கதேச அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரின் முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு வங்கதேசம் சுருண்டது. அதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 445 ரன்களை குவித்தது.

Naseem-Sha

212 பின்தங்கிய நிலையில் விளையாடிய வங்கதேச அணி 124 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த போது 41வது ஓவரை வீசிய நிஷா அடுத்தடுத்து 3 பந்துகளில் விக்கெட் வீழ்த்தி உலக சாதனை புரிந்தார். இவருக்கு தற்போது 16 ஆண்டுகள் 279 நாட்கள் வயது ஆகிறது. இதன் காரணமாக இவர் இளம் வயதிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement