இங்கிலாந்து வீரரின் ஹெல்மெட்டை பதம்பார்த்த 17 வயது பாக் வீரரின் அதிவேகப்பந்து – வைரலாகும் வீடியோ

Naseem

பல்வேறு இன்னல்களை கடந்து தற்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த தொடரில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.

pak

அந்த அணியின் முன்னணி வீரர்களான பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சினால் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் முடிவு வரை 137 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வோக்ஸ்க்கு எதிராக நசீம் ஷா வீசிய பந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

வோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கி அது உடைந்ததால் அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா என்று சோதனை செய்து பார்க்கையில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரியவந்தது.

- Advertisement -

மேலும் அவரின் இந்த மிரட்டலான பந்துவீச்சு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்காக தனது 16 வயதிலேயே அறிமுகமான இவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.