வீடியோ : ஹீரோ டு ஜீரோ, காட்டுத்தனமாக சுற்றி வித்யாசமாக அவுட்டான பாக் வீரர் – கலாய்க்கும் ரசிகர்கள்

Naseem Shah
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு சமீபத்திய 2023 பிஎஸ்எல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய இளம் வீரர்களுடன் சடாப் கான் தலைமையில் புதுமையான முயற்சியாக இத்தொடரில் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. குறிப்பாக ஒரே நேரத்தில் முக்கிய தொடரில் முதன்மை அணியையும் கத்துக்குட்டிகளுக்கு எதிராக 2வது தர அணியையும் விளையாட வைத்து வெற்றி கண்டு வரும் இந்தியாவின் ஸ்டைலை இத்தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் பின்பற்றியுள்ளது.

ஆனால் அதற்கான பலன் கிடைத்ததா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் சார்ஜாவில் மார்ச் 24ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் அற்புதமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 20 ஓவரில் 92/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இமாத் வாசிம் 18 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி, முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

ஹீரோ டு ஜீரோ:
அதைத்தொடர்ந்து 93 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி 17.5 ஓவரில் 98/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்துள்ளது. அதை விட இதே சார்ஜா மைதானத்தில் கடைசியாக கடந்த 2022 ஆசிய கோப்பையில் மோதிய போது ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 130 ரன்களை துரத்திய பாகிஸ்தான் 19வது ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

குறிப்பாக பரூக்கி வீசிய கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஆசிய கோப்பையில் தான் அறிமுகமாகி பெரிய அளவில் அனுபவமில்லாமல் 10வது இடத்தில் களமிறங்கிய டெயில் எண்டரான நாசீம் ஷா முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு 14* (4) ரன்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். அந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கிட்டத்தட்ட அடித்துக் கொள்ளாத குறையாக மோதிக்கொண்ட நிலையில் போட்டி முடிந்ததும் களத்திற்கு வெளியே இரு நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டார்கள்.

- Advertisement -

அதற்கு இந்த போட்டியில் அதே மைதானத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து தக்க பதிலடி கொடுத்துள்ள ஆப்கானிஸ்தான் சரித்திர வெற்றியை பதிவு செய்துள்ளதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதை விட இந்த போட்டியில் 71/7 என்ற நிலையில் பாகிஸ்தான் தடுமாறிய போது முகமது நபி வீசிய 16வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட நாசீம் ஷா எப்படியாவது சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் காட்டுதனமாக பேட்டை சுழற்றினார்.

இருப்பினும் கண்ணை மூடிக்கொண்டு பந்து வருவதற்கு முன்பே பேட்டை சுழற்றிய அவர் மீது தாமதமாக வந்த பந்து வயிற்றில் அடித்தது. ஆனால் அதற்குள் கண்ணை மூடிக்கொண்டு சுழற்றி வேகத்தில் அவரை அறியாமலேயே அவருடைய பேட் பின்னாடி இருக்கும் ஸ்டம்பில் பட்டது. அதனால் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டான அவர் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டி விட்டு பெவிலியன் நோக்கி நடந்தார்.

இதையும் படிங்க:எப்போவும் தோற்கவே கூடாதா? ஒருவேளை ஜெயிச்சுருந்தா அந்த முடிவை குறை சொல்விங்களா – இந்திய ரசிகர்களுக்கு அஷ்வின் பதிலடி

அப்படி கடந்த முறை ஹீரோவாக செயல்பட்டு தங்களது வெற்றியை பறித்த அவர் இம்முறை அதே மைதானத்தில் இப்படி மோசமாக அவுட்டானதை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் நமது நண்பர்கள் பந்தை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு காட்டுத்தனமாக பேட்டை சுழற்றி பந்தை அடிக்காமல் கீழே விழுவது போல அவர் பேட்டிங் செய்ததாக இதர ரசிகர்களும் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement