எப்போவும் தோற்கவே கூடாதா? ஒருவேளை ஜெயிச்சுருந்தா அந்த முடிவை குறை சொல்விங்களா – இந்திய ரசிகர்களுக்கு அஷ்வின் பதிலடி

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்று நியூசிலாந்தின் உதவியுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கடைசி 2 போட்டிகளில் சுமாராக செயல்பட்ட இந்தியா 2019க்குப்பின் 26 தொடர்களுக்குப்பின் முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்து ஐசிசி தரவரிசையில் தன்வசம் வைத்திருந்த நம்பர் ஒன் இடத்தையும் ஆஸ்திரேலியாவிடம் பறி கொடுத்துள்ளது.

Shami

- Advertisement -

அதிலும் குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இத்தொடரில் 4 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த இந்தியா நம்பர் ஒன் இடத்தை தாரை வார்த்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அத்துடன் இத்தொடரின் முதல் போட்டியில் வெறும் 188 ரன்கள் துரத்துவதற்கு திணறிய இந்தியா இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி கேஎல் ராகுல் – ரவீந்திர ஜடேஜா ஆகியோரது போராட்டத்தால் வென்றது.

அஷ்வின் பதிலடி:
ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் பேட்டிங்கில் 117 ரன்களுக்கு சுருண்ட இந்தியாவை பந்து வீச்சில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத அளவுக்கு சரமரியாக அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும் கடந்த காலங்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் முன்னேறாமல் மிட்சேல் ஸ்டார்க்கிடம் மீண்டும் சரணடைந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

SKY

அதனால் சொந்த மண்ணில் 2011க்குப்பின் இம்முறையும் நிச்சயமாக இந்தியா உலகக் கோப்பையை வெல்லப்போவதில்லை என்று இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். முன்னதாக இத்தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான சூரியகுமார் யாதவ் 7வது இடத்திலும் அக்சர் படேல் 5வது இடத்தில் களமிறக்கப்பட்டதும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் விளையாட்டில் எப்போது வெற்றி பெறுவது கட்டாயமா என்று இந்திய ரசிகர்களிடம் கேட்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருவேளை அப்போட்டியில் வென்றிருந்தால் சூரியகுமாருக்கு பதில் அக்சர் படேல் மேலே களமிறக்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியிருக்காது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நமது நாட்டில் இந்தியா எப்போதும் வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அத்துடன் இந்தியா வலுவான அணி என்ற கருத்தும் காணப்படுகிறது. நாம் வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சில நேரங்களில் நாம் வெற்றி எல்லைக்கு கீழே செயல்படுகிறோம். இருப்பினும் அதை புரிந்து கொள்ளாமல் நம்மை யாராலும் வெல்ல முடியாத தேசமாக கருதுகிறோம். எனவே சில நேரங்களில் ரசிகர்களிடமிருந்து வரும் விமர்சனங்கள் கடினமானது. அதே போல் விமர்சகர்களும் இப்போதெல்லாம் கடுமையாக பேசுகிறார்கள்”

Ashwin

“குறிப்பாக 3வது போட்டியில் சூரியகுமார் 7வது இடத்திலும் கேஎல் ராகுல் 4வது இடத்திலும் அக்சர் படேல் முன்கூட்டியேவும் பேட்டிங் செய்தது நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை பார்க்க வேண்டும்”.குறிப்பாக மேக்ஸ்வெல் வந்ததும் அவரை ஆஸ்திரேலியா எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஏனெனில் அவரைப் போன்ற வீரர்கள் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்”

- Advertisement -

“அதே போல சூரியகுமார் யாதவ் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர். இருப்பினும் அப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை. அதாவது 4வது இடத்தில் விளையாட வேண்டிய மார்னஸ் லபுஸ்ஷேன் 5வது இடத்தில் டேவிட் வார்னருக்காக விளையாடினார். ஒருவேளை அவர்கள் தோற்றிருந்தால் இந்த கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டிருக்கும். எனவே இவை அனைத்தும் சூழ்நிலைக்கேற்ப மனிதர்கள் எடுக்க முடிவாகும்”

இதையும் படிங்க:எனக்கு இன்னும் கொஞ்சம் மாதம் டைம் ஆகும். ஐ.பி.எல் துவங்கும் முன்னரே முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – மேக்ஸ்வெல்

“குறிப்பாக அக்சர் படேல் ஏன் மேலே அனுப்பப்பட்டார்? ஒருவேளை அவர் ஆடம் ஜாம்பாவை எதிர்கொண்டு 35 – 50 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி இந்தியாவின் பக்கம் வந்திருக்கும். எனவே நம்முடைய எண்ணம் சரியானது. ஆனால் அவர் ரன் அவுட்டானாதல் வெற்றி நமக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement