எங்கே இருக்கிறோம் என்று தெரியாமலேயே விளையாடிய இளம் வீரர் – கடுப்பாகி அதிரடி அபராதம் போட்ட பாக், நடந்தது என்ன

- Advertisement -

இந்தியாவுக்கு போட்டியாக ஐபிஎல் தொடரை விட உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் தொடர் என்ற பெருமை பேசி வரும் பாகிஸ்தான் வாரியம் நடத்தும் பிஎஸ்எல் தொடரின் 2023 சீசன் பிப்ரவரி 13 முதல் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 15ஆம் தேதியன்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின. முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர்ஸ் அணி முல்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவரில் 110 ரன்களுக்குச் சுருண்டது.

அதிகபட்சமாக ஜேசன் ராய் 27 (18) ரன்கள் எடுத்த நிலையில் முல்தான் சார்பில் அதிகபட்சமாக இளம் வீரர் இசாணுல்லா 5 விக்கெட்களை செய்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய முல்தான் அணிக்கு ஷான் மசூட் 3 ரன்னில் அவுட்டானாலும் கேப்டன் முகமத் ரிஸ்வான் 28* (34) ரன்களும் ரிலீ ரோசவ் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 78* (42) ரன்கள் குவித்து 13.3 ஓவரிலேயே 111/1 ரன்கள் எடுக்க வைத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அப்படி ஒருதலைப் பட்சமாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர்ஸ் அணிக்கு இளம் பாகிஸ்தான் வீரர் நாசீம் ஷா 9வது இடத்தில் களமிறங்கினார்.

- Advertisement -

அதிரடி அபராதம்:
ஆனால் 1 ரன்னில் அவுட்டான அவர் பிஎஸ்எல் தொடரில் தற்சமயத்தில் விளையாடும் கிளாடியேட்டர்ஸ் அணியின் ஹெல்மெட்டை அணிந்து வராமல் சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிய கோமில்லா விக்டோரியா அணியின் ஹெல்மெட்டை அணிந்து விளையாடினார். அதை ரசிகர்களை விட உன்னிப்பாக கவனித்த போட்டியின் நடுவர் பிஎஸ்எல் நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் வாரியம் அப்போட்டியின் கட்டணத்திலிருந்து அவருக்கு 10% அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தது.

பொதுவாகவே பாகிஸ்தான் வீரர்கள் இது போல வேடிக்கையான விஷயங்களை செய்வது புதிதல்ல. குறிப்பாக சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட பாபர் அசாம் ஓய்வெடுக்க சென்ற போது சப்ஸ்டியூட் ஃபீல்டராக களமிறங்கிய முகமது ரிஸ்வான் பீல்டர்களை செட்டிங் செய்து கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அடிப்படை விதிமுறைப்படி சப்ஸ்சிடியூட் பீல்டராக களமிறங்குபவர் பீல்டிங் செய்வதை தவிர்த்து வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது. அப்படி அடிப்படை விதிமுறை தெரியாமலேயே விளையாடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு மத்தியில் இவரும் எந்த தொடரில் எந்த அணிக்காக விளையாடுகிறோம் என்பது தெரியாமலேயே வேறு அணியின் ஹெல்மட்டை பயன்படுத்தி மற்றுமொரு சொதப்பலை வெளிப்படுத்தி அபராதத்தையும் தண்டனையாக பெற்றுள்ளார்.

- Advertisement -

அதை பார்க்கும் ரசிகர்கள் விதிமுறை தெரியாமல் விளையாடுவதும் விதிமுறைகளை மீறி விளையாடுவதும் பாகிஸ்தான் வீரர்களுக்கு புதிதல்ல என்று கலாய்க்கிறார்கள். அத்துடன் ஒருவேளை டெயில் எண்டர் என்பதால் நசீம் ஷா அதிகமாக பேட்டிங் செய்ய களமிறங்க மாட்டார் என்ற காரணத்தால் அவருக்கு ஹெல்மட்டை வாங்கி தரவில்லையா என்றும் ரசிகர்கள் அவர் விளையாடும் அணி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

அந்த வகையில் வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை ஒன்றுக்கு இரண்டு வாங்கி கொடுப்பதில்லை ஆனால் தரத்தில் மட்டும் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் உலகின் சிறந்த நம்பர் ஒன் தொடர் என்று உங்களால் எப்படி பேச முடிகிறது என்று பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க :ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை, அணி வீரர்கள், மைதானங்கள்

இதை தொடர்ந்து வரும் மார்ச் 12 முதல் நடைபெறும் இத்தொடரின் லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. அதில் வெல்லும் 2 அணிகள் வரும் மார்ச் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement