வீரர்களின் உயிர் விஷயத்தில் விளையாட முடியாது. அணியில் இருந்து இளம்வீரரை தூக்கிய – பாக் நிர்வாகம்

Naseem

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்த கொரானா விதிமுறையின் படி நடந்து கொள்ளாததால், பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் இளம் வேகப் பந்து வீச்சாளர் ஒருவர். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரானது, வீரர்களிடையே கொரானா பரவியதன் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரைப் போலவே இதற்கு முன்னதாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கும், வீரர்களிடையே கொரனா பரவியதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்திக்கொள்ள, அந்நாட்டு அரசாங்காமானது கடந்த 19ஆம் தேதி அனுமதி அளித்தது.

psl 1

அதனையடுத்து பிஎஸ்எல் தொடரில் கலந்துகொள்ளவிருக்கும் வீரர்கள் அனைவரும் மே 26 ஆம் தேதி ஐக்கிய அமீரகத்திற்கு புறப்படும்படியாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டம் வகுத்திருந்த்து. மேலும் மே 26ஆம் தேதிக்கு முன்னராக, 48 மணி நேரத்திற்குள்ளாக எடுக்கப்பட்ட கொரனா நெகட்டிவ் மருத்துவ பரிசோதனை சான்றிதழை வீரர்கள் அனைவரும் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் பிஎஸ்எல் தொடரில் க்வெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப் பந்து வீச்சாளரானா நஷீம் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் அறிவுறுத்தலைப் அலட்சியப்படுத்தும் விதமாக, மே 18 ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட கொரானா சான்றிதழை சமர்பித்திருக்கிறார்.

- Advertisement -

அவரின் இந்த செயலைக் கண்டு கடுப்பான அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம், அவரை பிஎஸ்எல் தொடரிலிருந்து நீக்கியிருக்கிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம், எந்த ஒரு இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையையும் நாங்கள் சிதைக்க விரும்பவில்லை. நஷீம் ஷா, கொரானா விதமுறைகள மீறியதால் அவர் தொடரிலிருந்து விலக்கப்படுகிறார். நாங்கள் ஏன் இந்த கடினமான முடிவை எடுத்தோம் என்று க்வெட்டா கிளேடியேட்டர்ஸ் அணி நிர்வாகம் உணர்ந்து கொள்ளும் என நினைக்கிறோம் என்று அறிவித்த அந்நாட்டு நிர்வாகம், தொடரில் பங்கு பெற்றிருக்கும் மற்ற வீரர்கள் அனைவருக்கும் காட்டமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில்,

Naseem-Sha

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் விதித்துள்ள கொரானா கட்டுப்பாட்டு விதிமுறையில், எந்த வித சமரசத்தையும் வீரர்களுக்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஏற்படுத்திக் கொள்ளாது. எனவே வீரர்கள் அனைவரும் கொரானா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஒருவேளை அதை மீறும் பட்சத்தில் வீரர்களின் மீது கடுமையான முடிவைத்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் எடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று அந்த அறிக்கையில் அறிவித்திருக்கிகது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம்.

- Advertisement -

Naseem

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் முடிவடையும்படி பிஎஸ்எல் தொடரானது திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர் ஆரம்பித்த பாதியிலேயே தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் மற்றும் அணி ஊழியர்கள் என மொத்தம் 19 பேர் கொரானா தொற்றுக்கு ஆளானதால் இத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த தொடர் தொடங்கியருப்பதால் இந்த முறையும் வீரர்களிடையே கொரானா பரவகூடாது என்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

Advertisement