தாயார் இறந்த சோகத்திலும் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி நெகிழவைத்த – 16 வயது வீரர்

Naseem
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

Pak va Aus

- Advertisement -

அதன்படி இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணிக்கும், ஆஸ்திரேலியா அணிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்டது என்பதால் இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் உத்வேகம் காட்டும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டாஸ் முடிந்ததும் இந்த போட்டியில் 16 வயதே நிரம்பிய நசீம் ஷா விளையாடுகிறார் என்பதை அவர் அறிவித்தார்.

அதன்படி இந்த போட்டியில் நசீம் ஷா அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் இவர் ஆஸ்திரேலிய நிச்சயம் திணறடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் வழங்கினார்.

இந்த தொடரின் ஒரு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றபோது அவரது தாயார் இறந்து விட்டதாக தகவல் வந்தது. உடனே அவர் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று அணி நிர்வாகத்தின் தெரிவித்தார். ஆனால் அவர் சொந்த ஊர் திரும்புவதற்கு 48 மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் 24 மணி நேரத்திற்குள் சடங்குகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் சொன்னதால் அவரை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே அந்த இறுதிச் சடங்குகளை கலந்துகொண்டனர்.

Naseem-Sha

அவரது தாயாரின் ஆசைப்படி நசீம் ஷா தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் பாகிஸ்தான் திரும்ப வேண்டாம் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் அணி நிர்வாகம் அவரை சமாதானம் செய்து விளையாட வைத்தனர். எனவே அவரது தாயார் மறைவுக்கு க்கோட நாடு திரும்பாமல் பாகிஸ்தான் தேசிய அணியில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement