இப்படி விளையாடுனா எப்படி ஜெயிக்க முடியும்.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – வங்கதேச கேப்டன் வருத்தம்

Shanto
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணியானது ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்த வேளையில் தற்போது அடுத்ததாக நடைபெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இழந்துள்ளது. இப்படி தொடர்ச்சியான 5 தோல்விகள் நிச்சயம் அவர்களை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது.

மோசமான செயல்பாடுகள் தான் தோல்விக்கு காரணம் :

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த வங்கதேச அணியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்து.

- Advertisement -

இந்த தோல்வியின் மூலம் முடிவுக்கு வந்த இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் என்று கணக்கில் இழந்து பரிதாபமாக நாடு திரும்பவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கூறுகையில் :

நாங்கள் உண்மையிலேயே எங்களது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தவில்லை. இந்த தொடர் முழுவதுமே நாங்கள் எங்களது திட்டத்தின் படி பேட்டிங்கிலோ, பந்துவீச்சிலோ எந்த ஒரு செயல்பாட்டையும் திருப்தியாக செய்யவில்லை. பந்துவீச்சை பொறுத்தவரை ஓரளவு ஒரு சில ஓவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தோம்.

- Advertisement -

ஆனால் பேட்டிங்கில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிலும் இந்த மூன்றாவது போட்டியில் எங்களது பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இன்னும் நாங்கள் எங்களுக்குள்ளே நிறைய சவால்களை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : வங்கதேச அணிக்கெதிரான இந்த வெற்றிக்கு கவுதம் பாய் சொன்ன அந்த வார்த்தை தான் காரணம் – சூரியகுமார் யாதவ்

அப்போதுதான் அணியில் உள்ள குறைகளை நீக்கி முன்னேற முடியும். இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அவர்களுக்கு இணையான செயல்பாட்டையும், திறனையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இந்த தொடரில் அனைத்து துறையிலும் எங்களது செயல்பாடு மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என வங்கதேச கேப்டன் நஜ்முல் ஷாண்டோ வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement