வங்கதேச அணிக்கெதிரான இந்த வெற்றிக்கு கவுதம் பாய் சொன்ன அந்த வார்த்தை தான் காரணம் – சூரியகுமார் யாதவ்

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 298 ரன்கள் அடித்தால் மாபெரும் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கினை துரத்திய வங்கதேச அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த பிரமாதமான வெற்றிக்கு காரணம் இதுதான் :

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : நாங்கள் ஒரு அணியாக இந்த தொடரை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. எங்களது அணியில் உள்ள அனைவருமே சுயநலமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அணிக்காக எதையும் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

- Advertisement -

மேலும் ஹார்டிக் பாண்டியா சொன்னது போலே ஒவ்வொருவரின் வெற்றியையும் மற்றவர்கள் கொண்டாடுகிறோம். அது மைதானத்திலும் சரி, வெளியிலும் சரி, அனைவருமே ஒன்றாக இருந்து மற்றவர்களின் வெற்றியை ரசித்து பார்க்கிறோம். அந்த வகையில் இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.

ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு நாங்கள் அங்கு செல்வதற்கு முன்னதாகவே கௌதம் கம்பீர் எங்களிடம் : போட்டி எப்படி சென்றாலும் சரி எந்த ஒரு வீரரையும் விட நமது அணி தான் மிகப்பெரிய ஒன்று. நீங்கள் 99 ரன்கள் அல்லது 49 ரன்களில் இருந்தால் கூட அணிக்கு அப்போது ஒரு சிக்சர் தேவை என்றால் தைரியமாக உங்களது ஷாட்டை விளையாடுங்கள்.

- Advertisement -

உங்களின் தனிப்பட்ட சாதனையை விட அணியின் வெற்றி தான் முக்கியம் என்று சொன்னார். அதேபோன்று தான் இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாகவும் எந்த ஒரு சாதனையையும் விட அணிதான் முக்கியம், அணியின் வெற்றிதான் முக்கியம் என்று சொன்னார். அந்த வகையிலே நாங்கள் ஒரு அணியாக எங்களது அணி வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே விளையாடி வருகிறோம்.

இதையும் படிங்க : 133 ரன்ஸ்.. சவால் விட்ட வங்கதேசத்தை 5 தோல்விகளுடன் வீட்டுக்கு அனுப்பிய இந்தியா.. பெரிய சாதனை வெற்றி

தனிப்பட்ட சாதனைகளை ஒதுக்கிவிட்டு இந்தியா எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்ற நினைப்பை எங்களுக்குள் கௌதம் கம்பீர் விதைத்துள்ளார். அதுவே எங்கள் வெற்றிக்கு காரணம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement