இந்திய அணிக்கெதிரான 2 போட்டியிலும் நாங்க இப்படி மோசமா தோக்க இதுவே காரணம் – வங்கதேச கேப்டன் வருத்தம்

Shanto
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி துவங்கி இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதனால் தான் இந்திய அணியிடம் தோற்றோம் :

இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக நான்காவது நாளில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது அதிரடியாக பேட்டிங் செய்து 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

இந்திய அணியின் இந்த அதிரடியான முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் தாங்கள் நினைத்தபடியே இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி ஐந்தாம் நாள் காலையான இன்று வங்கதேச அணியை 146 ரன்களுக்கு சுருட்டியது. இதன் காரணமாக 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கூறுகையில் : நாங்கள் இந்த தொடரின் 2 போட்டியிலுமே நன்றாக பேட்டிங் செய்யவில்லை. டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது அவசியம். ஆனால் எங்களது அணியின் வீரர்கள் 30-40 பந்துகளை சந்தித்ததும் ஆட்டமிழந்து விடுகிறார்கள்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது அவசியம். ஏனெனில் அப்போதுதான் மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு பெரிய ரன்களை நோக்கி செல்ல முடியும். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பேட்டிங் செய்த விதத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்ட நேரத்தையும் பார்த்தால் மிகச் சிறப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

இதையும் படிங்க : 97 சிக்ஸ்.. தெ.ஆ, இங்கிலாந்தை முந்திய இந்தியா.. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய இரட்டை உலக சாதனை

பந்துவீச்சில் ஒரு அணியாக எங்களது செயல்பாடு திருப்தியாக இருக்கிறது. முக்கிய வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தனர். பேட்டிங்கில் பெரிய பார்ட்னர்ஷிப் இல்லாமல் போனதாலேயே இந்த தொடரை நாங்கள் இழக்க நேரிட்டது என நஜ்முல் ஷாண்டோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement