வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. சென்னையில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவில் வீழ்த்தியது. அதன் பின் கான்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அட்டகாசமான வெற்றி பெற்றது.
அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முன்னதாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் 2, 3வது நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் அப்போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டி20 போல ரன்ரேட்:
ஆனால் கடைசி 2 நாட்களில் அனலாக பந்து வீசிய இந்திய அணி வங்கதேசத்தை 233, 146 ரன்களுக்கு சுருட்டியது. அதே போல பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் சரவெடியாக விளையாடிய இந்தியா 34.4 ஓவரில் 285-9 ரன்களை 8.22 என்ற ரன்ரேட்டில் குவித்து டிக்ளேர் செய்தது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணியாக இந்தியா 5 உலக சாதனைகளையும் படைத்தது.
இறுதியில் 95 ரன்களை துரத்திய இந்தியா 17.2 ஓவரில் 98-3 ரன்களை 5.65 என்ற ரன்ரேட்டில் குவித்து எளிதான வெற்றி பெற்றது. அந்த வகையில் இப்போட்டியில் மொத்தமாக இந்திய அணி 2 இன்னிங்ஸ்களையும் சேர்த்து 7.36 ரன்ரேட்டில் 373 ரன்களை குவித்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7க்கும் மேற்பட்ட ரன்ரேட்டில் விளையாடிய முதல் அணி என்ற வரலாறு காணாத உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்தியாவின் உலக சாதனைகள்:
மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்ரேட்டில் ரன்களை குவித்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையையும் உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இந்தியா: 7.36, வங்கதேசத்துக்கு எதிராக, கான்பூர், 2024*
2. தென்னாபிரிக்கா: 6.80, ஜிம்பாப்பேவுக்கு எதிராக, கேப் டவுன், 2005
3. இங்கிலாந்து: 6.43, பாகிஸ்தானுக்கு எதிராக, ராவல்பிண்டி, 2022
இதையும் படிங்க: சுனில் கவாஸ்கரின் 53 வருட சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. சேவாக் உட்பட யாரும் செய்யாத சாதனை
அத்துடன் இப்போட்டியில் இந்தியா 12 சிக்ஸர்கள் அடித்தது. இதே போல இந்த வருடம் முழுவதும் அதிரடியாக விளையாடிய இந்தியா மொத்தம் 94* சிக்ஸர்கள் அடித்துள்ளது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்தப் பட்டியல்:
1. இந்தியா: 94* (2024)
2. இங்கிலாந்து: 89 (2022)
3. இந்தியா: 87 (2021)
4. நியூஸிலாந்து: 81 (2014)
5. நியூஸிலாந்து: 71 (2013)