IND vs AFG : இலக்கு பெரியதாக இல்லை. ஆனால், நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் – ஆப் கேப்டன் நயிப் பேட்டி

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்

Naib
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ind vs afg

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

Kohli

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் நயிப் கூறியதாவது : நாங்கள் முதலில் சிறப்பாக பந்து வீசினோம். எங்களது பவுலர்கள் நன்றாக பந்துவீசி இந்திய அணியின் வலுவான பேட்டிங் ஆர்டரை கட்டுப்படுத்தினார்கள். பும்ரா டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினார். எங்கள் அணியில் ரஷீத், முஜீப் மற்றும் ரஹ்மத் ஆகிய அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள் இந்த போட்டி முடிவில் ஒரு சிறந்த நல்ல போட்டியாகும்.

bumrah

இலக்கு பெரியதாக இல்லை என்றாலும் எங்கள் அணியின் பேட்டிங்கில் ஒருத்தராவது நின்று ஆடி இருக்க வேண்டும். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் ஒரு 80 ரன்கள் போன்று அடிக்கவில்லை. அனைவரும் 30 ரன்கள் அதனைப் போன்றே அடித்தார்கள் இது வெற்றிக்கு பத்தாது மொத்தத்தில் இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டி சிறப்பாக அமைந்தது என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் நயிப் கூறினார்.

Advertisement