இந்தியா பெரிய டீமா இருக்கலாம்.. ஆனா இதை செய்றவங்க தான் ஜெய்ப்பாங்க.. 150 கி.மீ வங்கதேச பவுலர் பேட்டி

Nahid Rana
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. அந்தத் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்பதே இங்குள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏனெனில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே கொஞ்சம் பலவீனமான அணியாக கருதப்படும் வங்கதேசத்தை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கடந்த வாரம் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 என்ற கணக்கில் வங்கதேசம் வீழ்த்தியது.

- Advertisement -

வலுவான இந்திய அணி:

அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் வரலாறு படைத்தது. எனவே அந்த வெற்றியால் கிடைத்த தன்னம்பிக்கையுடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா நட்சத்திர வீரர்களைக் கொண்ட மிகவும் பெரிய அணி என்று வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் போட்டி நாளன்று யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதன் படி இந்தியாவுக்கு எதிராக நன்றாக விளையாடி தாங்கள் வெல்வோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அறிமுகமான நஹிட் ராணா 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தினார்.

- Advertisement -

வங்கதேசம் வெல்லுமா:

அப்படியே பாகிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் 4 விக்கெட்டுகள் 44 ரன்கள் எடுத்த அவர் வங்கதேசத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். தற்போது இந்திய தொடர் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய தொடருக்காக நாங்கள் நன்றாக தயாராகியுள்ளோம். அதற்கான பயிற்சிகளை நாங்கள் துவங்கியுள்ளோம். எவ்வளவு அதிகமாக பயிற்சிகளை எடுக்கிறோமோ அந்தளவுக்கு போட்டியில் திட்டங்களை செயல்படுத்த முடியும்”

இதையும் படிங்க: சச்சின் மேலும் ஒரு சாதனையை சமன் செய்த ஜோ ரூட்.. முறியடிக்கவும் கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

“இந்தியா மிகவும் நல்ல அணி. ஆனால் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் அணியே வெற்றி பெறும். இந்தியா செல்வதற்கு முன்பாக எனது நாட்டுக்காக ஏதேனும் சாதிக்கத் துடிக்கிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன். வேகத்தை உங்களால் கணிக்க முடியாது. சில நேரங்களில் ரிதத்தின் அடிப்படையில் உங்களால் திடீரென அந்த வேகத்தை (150 கி.மீ) தொட முடியும். நான் யார் போலவும் வர விரும்பவில்லை. வங்கதேசத்தின் நஹிட் ராணாவாக எனது சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement