தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நாராயணன் ஜெகதீசன் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி தற்போது வரை தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் உள்ளூர் தொடர்களில் ஓரளவு சிறப்பாக விளையாடி வந்தாலும் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனக்கு சி.எஸ்.கே அணியின் உதவியவர் அவர்தான் : நாராயணன் ஜெகதீசன்
ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் ரிஷப் பண்ட் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியில் மாற்று வீரராக இடம் பிடித்திருந்தார். அதே வேளையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2020 முதல் 2023 வரை 13 போட்டிகளில் விளையாடி 162 ரன்கள் குவித்துள்ளார்.
கடைசியாக ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருந்த அவர் கடந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின் போது எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனார். இருப்பினும் 29 வயதான அவர் தொடர்ச்சியாக தனது முயற்சிகளை வெளிப்படுத்தி எப்படியாவது தனது திறமையை நிரூபித்து விட வேண்டும் என்று காத்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2020 முதல் 2022 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் இடம்பிடித்திருந்த வேளையில் தனக்கு உதவியது யார்? என்பது குறித்த சில கருத்துக்களை ஜெகதீசன் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்தபோது பல்வேறு தலைசிறந்த வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
ஆனாலும் அவர்களில் எனக்கு ராபின் உத்தப்பா தான் சரியான முறையில் ஆலோசனைகளை வழங்கி என்னுடைய பேட்டிங் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தார். அதிலும் குறிப்பாக கடினமான தருணங்களில் எவ்வாறு நிதானத்தை இழக்காமல் விளையாடுவது, அழுத்தமான வேளையிலும் சரியான ஃபார்மை எப்படி வெளிப்படுத்துவது என்பது குறித்த முக்கியமான ஆலோசனைகளை ராபின் உத்தப்பா தான் வழங்கி இருந்தார் என நாராயணன் ஜெகதீசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2025 ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில் விளையாடுவாரா? சந்தேகமாகியுள்ள இடம் – என்ன நடந்தது?
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு அணிக்காக ரெட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் எப்படியாவது இந்திய டெஸ்ட் அணியில் ஒரு வாய்ப்பினை பெற்று விடவேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார்.



