- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 ஆவது போட்டியில் இருந்து விலகிய ரிஷப் பண்ட்.. இந்திய அணியில் இணைந்த தமிழக வீரர் – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோஃர்டு மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து பந்து வீச்சாளரான கிரிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் கால் பகுதியில் காயமடைந்தார். இதன் காயமாக காரணமாக அவரது வலது கால் சுண்டு விரல் பகுதியில் வீக்கம் ஏற்பட்டது.

ரிஷப் பண்டுக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்த தமிழக வீரர் :

அதுமட்டுமின்றி வலியால் துடித்த அவருக்கு மைதானத்தில் முதலுதவி செய்யப்பட்டாலும் பந்து தாக்கியதில் விரல் பகுதியில் இருந்து ரத்தம் கசிந்ததால் அவரை உடனடியாக மைதானத்திலிருந்து மருத்துவக் குழு வெளியேற்றியது. பின்னர் கொஞ்சமும் வலி குறையாததால் அவரை மருத்துவமனைக்கும் இந்திய அணியின் மருத்துவக்குழு அழைத்துச் சென்றிருந்தது.

- Advertisement -

அப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரிஷப் பண்டுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் இந்திய அணி முதல் இன்னிங்சில் சரிவை நோக்கி சென்ற வேளையில் நாட்டுக்காக உடைந்த பாதத்துடன் விளையாட வந்த ரிஷப் பண்ட் 75 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 54 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவரால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் விளையாட முடியாது என்று கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதன்காரணமாக அவருக்கு பதிலாக எந்த வீரர் அணியில் இணைவார்? என்று கேள்வியும் எழுந்தது. இப்படி ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறுவார் என்பது ஏற்கனவே உறுதியான வேளையில் அவருக்கு மாற்று வீரராக இணைய பல இந்திய வீரர்களின் பெயர் அடிபட்டது. ஆனால் பண்டுக்கு பதிலாக தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்கிட் கீப்பர் பேட்ஸ்மேனான நாராயணன் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : முதல் இந்திய வீரராக இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனையை நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடி வரும் நாராயணன் ஜெகதீசன் டொமெஸ்டிக் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -