முதல் இந்திய வீரராக இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனையை நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

Ravindra Jadeja
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியானது இந்த போட்டியை கடைசி நாள் அன்று டிரா செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

ரவீந்திர ஜடேஜா நிகழ்த்திய சரித்திர சாதனை :

அதேவேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யவும் வாய்ப்பு உள்ளதால் இந்த நான்காவது போட்டி டிராவில் முடிவடைந்தது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி வெளிப்படுத்திய சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த நான்காவது போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா 185 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 107 ரன்களை குவித்தார்.

அதுமட்டும் இன்றி பந்து வீச்சின் போதும் 37.1 ஓவரை வீசி 143 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அப்படி இவரது இந்த சிறப்பான செயல்பாடு மூலம் இங்கிலாந்து மண்ணில் முதல் இந்திய வீரராக ரவிந்திர ஜடேஜா மாபெரும் ஒரு சரித்திர சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்திய சாதனை யாதெனில் : இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1000+ ரன்கள் மற்றும் 30+ விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஒரே ஒரு இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : சுந்தர், ஜடேஜா சதத்தை தடுக்கும் வகையில் ட்ராவை அழைத்தது ஏன்? பென் ஸ்டோக்ஸ் விளக்கத்துடன் பாராட்டு

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக திகழ்ந்து வரும் ஜடேஜா பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் நட்சத்திர வீரராக இருந்து வருகிறார். அதுமட்டும் இன்றி விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றதற்கு அடுத்து இந்திய அணியில் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவ வீரராகவும் அவர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement