என்னுடைய பலத்தை விட்டுட்டு நான் ஏன் சிங்கிள் எடுக்கணும் – செய்தியாளர் கேள்விக்கு இஷான் கிஷன் கொடுத்த மாஸ் பதிலடி

Ishan Kishan 79
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி தோற்ற இந்தியா ராஞ்சியில் நடைபெற்ற 2வது போட்டியில் வென்று 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. அக்டோபர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்காவை 300 ரன்களை தொட விடாமல் மடக்கிப் பிடித்த இந்தியா 50 ஓவர்களில் 278/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அந்த அணிக்கு டீ காக் 5, ஜானெமன் மாலன் 25, டேவிட் மில்லர் 35*, ஹென்றிச் க்ளாஸென் 30 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 74 (76) ரன்களும் ஐடன் மார்க்ரம் 79 (89) ரன்களும் குவித்தனர்.

Shreyas IND vs SA Sanju Samson Shreyas Iyer

- Advertisement -

இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதன்பின் 279 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 13, சுப்மன் கில் 28 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி 48/2 என்ற சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கி 3வது விக்கெட்டுக்கு நங்கூரமாகவும் அதிரடியாகவும் 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இஷான் கிசான் அதிரடியாக 4 பவுண்டரி 7 சிக்சருடன் 93 (84) ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு அவுட்டனர்.

எதற்கு சிங்கிள்:
ஆனாலும் அவருடன் பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை அவுட்டாகாமல் 15 பவுண்டரியுடன் சதமடித்து 113* (111) ரன்கள் விளாச இறுதியில் சஞ்சு சாம்சன் 30* (36) ரன்கள் குவித்தார். அதனால் 45.5 ஓவரில் 282/3 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் சாய்ந்து விட மாட்டோம் என்று நிரூபித்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இந்திய ஜோடியில் ஒருபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் நிலைமைக்கு தகுந்தவாறு சிங்கிள், டபுள் தேவைப்படும் போது பவுண்டரி என நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Ishan Kishan 1

மறுபுறம் அட்டாக் செய்த இஷான் கிசான் பெரும்பாலும் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்காமல் சிக்ஸர்கள் அடிப்பதிலேயே குறியாக இருந்தார். அதில் வெற்றியும் கண்ட அவர் சதத்தை நழுவ விட்டு ஏமாற்றத்துடன் அவுட்டானார். இந்நிலையில் இந்த போட்டியில் அழுத்தமான தருணங்களில் சிங்கிள் எடுக்காமல் பெரும்பாலான தருணங்களில் ஏன் சிக்ஸர் அடிக்க முயற்சித்தீர்கள் என்று போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிங்கிள் எடுப்பதைவிட சிக்ஸர் அடிப்பதே தம்முடைய பலம் என்பதால் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் மாற்றவில்லை என்று இஷான் கிசான் அதிரடியான பதிலை கொடுத்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சில வீரர்களுக்கு சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுவது பலமாக இருக்கும். எனக்கு சிக்ஸர் அடிப்பது பலமாகும். அனைவராலும் முடியாத அளவுக்கு நான் அசால்டாக சிக்ஸர்களை அடிப்பேன். எனவே சிக்ஸர் அடித்து என்னுடைய வேலையை கச்சிதமாக செய்யும் போது ஸ்ட்ரைக் மாற்றுவது பற்றி நான் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் சிக்ஸர் அடிப்பது உங்களுடைய பலமாக இருந்தால் நீங்கள் அதையே பின்பற்ற வேண்டும். அந்த இடத்தில் நீங்கள் சிங்கிள் எடுக்க முயற்சித்தால் தடுமாற்றம் ஏற்படும். ஆனால் ஆம் எதிர்ப்புறம் விக்கெட்டுகள் விழும்போது நீங்கள் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுவது அவசியமான ஒன்றாகும். மேலும் என்னுடைய சதத்திற்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது நான் சிங்கிள் எடுத்து எளிதாக அதை தொட்டிருக்க முடியும்”

Ishan-Kishan

“ஆனால் நான் எப்போதும் எனது சொந்த சௌகரியத்திற்காக விளையாடுவதில்லை. மேலும் நாட்டுக்காக விளையாடும் போது என்னுடைய சொந்த சாதனையைப் பற்றி நான் நினைத்து பேட்டிங் செய்தால் நிச்சயமாக ரசிகர்கள் தலை குனியும் நிலைமை ஏற்படலாம். ஐபிஎல் தொடரிலும் 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது நான் 99 ரன்களில் அவுட்டானேன். அந்த இடத்தில் நான் ஸ்ட்ரைக் மாற்றுவது பற்றி நினைத்தால் போட்டியை வெல்வது கடினமாகி விடும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs SA : தப்பு பண்ணிட்டு அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர் – கலாய்க்கும் ரசிகர்கள்

அதாவது எப்போதுமே தனது சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் அணியின் வெற்றியை பற்றி நினைத்து தன்னுடைய பலமான சிக்ஸர் அடிக்கும் அதிரடி ஆட்டத்தை பின்பற்றுவதாக இஷான் கிசான் கூறியுள்ளார்.

Advertisement