இந்திய வீரர்கள் மீது நடக்கவேண்டிய துப்பாக்கி சூடு எங்கள் மீது நடந்தது – முரளிதரன் பகீர் பேட்டி

Muralitharan

இலங்கை அணி கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இலங்கை வீரர் தில்ஷான் மேலும் சில வீரர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வர இலங்கை வீரர்கள் சில ஆண்டு காலம் எடுத்துக் கொண்டனர்.

muralitharan

இதன் பின்னர் பாகிஸ்தான் சென்று எந்த ஒரு சர்வதேச நாடும் சென்று கிரிக்கெட் விளையாடுவது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்போது நடந்த துப்பாக்கி குண்டுகள் இந்திய வீரர்கள் மீது விழுந்து இருக்க வேண்டும். அதற்கு பதில் நாங்கள் வாங்கினோம் என்று கூறியுள்ளார் முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன். அவர் கூறுகையில்…

அந்த சம்பவம் நடைபெற்றபோது நானும் எனது அணியுடன் இருந்தேன். நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தோம். திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. எங்கள் முன்னால் பாதுகாப்புக்கு வந்த வாகனங்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள்.

Sl

அதன் பின்னர் எங்களையும் சுட்டார்கள். நாங்கள் அனைவரும் இருக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டாலும் இதன் காரணமாக அனைவரும் இலேசான காயத்துடன் தப்பித்தோம். அந்த காலகட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் உடனான சுற்றுப்பயணத்தை ரத்து செய்து அவர்களுக்கு பதிலாக தான் நாங்கள் சென்றோம்.

- Advertisement -

Mendis

இந்திய வீரர்கள் வாங்க வேண்டிய துப்பாக்கி குண்டுகள் எங்கள் அணி வீரர்கள் மீது பட்டது என்று கூறியுள்ளார் முத்தையா முரளிதரன். மேலும் தனது டெஸ்ட் வாழ்க்கை குறித்தும் பல்வேறு சுவாரசிய விடயங்களை பகிர்ந்துகொண்டார்.