தோனியின் இந்த குணம்தான் கேப்டனாக இருந்த அவரை தலைவனாக மாற்றியது – மனம்திறந்த முரளிதரன்

Muralitharan
- Advertisement -

தோனி ஒரு கேப்டனாக எவ்வளவு சாதனைகள் படைத்து இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆடுகளத்தில் எவ்வளவு மிகவும் அமைதியாகவும் சூழ்நிலையை கையாள்வார் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் ஒரு சில நேரங்களில் அதற்கு வெளியே தோனி எவ்வாறு நடந்து கொள்வார் என்பது நமக்கு தெரியாது.

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பேசியுள்ளார். இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் ஒரு நிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த போது தோனியை பற்றிய கேள்வி எழுப்பினார் ரவிசந்திரன் அஸ்வின். அதற்கு பதிலளித்த முத்தையா முரளிதரன் …

தோனி கேப்டனாக இருந்தால் ஒரு முக்கியமான விஷயம் ஒன்று நடக்கும். அவர் பந்து வீச்சாளர்களை நம்புவார். பந்துவீச்சாளர்கள் என்ன கேட்கிறார்களோ எல்லாவற்றையும் செய்து தருவார். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதிப்பார் சில சமயங்களில் பீல்டிங் செட் செய்யவும் அனுமதிப்பார்.

Muralitharan

சில நேரம் நாம் வீசும் நல்ல பந்துகள் சிக்சருக்கு பறக்கும் அப்போதும் கூட அவர் கைதட்டி பந்து வீச்சாளரை பாராட்டுவார்.ஏனென்றால் பந்து சிக்சருக்கு போனது முக்கியம் இல்லை. ஆனால் பந்து வீச்சாளர் வீசிய பந்து நல்ல பந்து, சிக்சர் அடிக்கும் அளவிற்கு அந்த பேட்ஸ்மேன் திறமையான ஆள் என்று கூறுவார்.

மேலும் எப்போதும் நிதானமாகவே இருப்பார் இது போன்ற குணநலன்கள் தான் நல்ல கேப்டனுக்கு தேவை. சீனியர் வீரர்கள் அனைவருக்கும் மதிப்பை அளிப்பார் என்று கூறியுள்ளார் முத்தையா முரளிதரன் முத்தையா முரளிதரன். தோனியின் தலைமையில் மூன்று வருடங்கள் விளையாடினார். மேலும் ரவிச்சந்திரன் அஷ்வினும் தோனியின் தலைமையில் சில வருடங்கள் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement