சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறிய நாடு திரும்பிய முஷ்டபிசுர் ரஹ்மான் – காரணம் என்ன? விவரம் இதோ

Mushtafizur
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அப்படி ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த தொடரில் விளையாடி வரும் சென்னை அணியானது இதுவரை நடைபெற்றுள்ள மூன்று போட்டியில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றியை பெற்ற சென்னை அணி டெல்லி அணிக்கெதிரான போட்டியின் போது தோல்வியை சந்தித்து இருந்தது. இந்நிலையில் சென்னை அணி அடுத்ததாக தங்களது நான்காவது லீக் போட்டியில் ஏப்ரல் 5-ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் இருந்து வங்கதேச அணியை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியேறி உள்ளார் என்றும் அவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றும் தெரியவந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற இருப்பதினால் அந்த தொடரில் பங்கேற்பதற்கான விசா நடைமுறைகளை சரி செய்ய அவர் நாடு திரும்பியதால் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மேக்ஸ்வெலையே சாய்ச்சுடீங்க.. உங்களை அங்க சந்திக்க காத்திருக்கேன் தம்பி.. மயங் யாதவுக்கு ஸ்மித் பாராட்டு

விசா வேலைகள் முடிவடைந்த பின்னர் அவர் சென்னை அணியில் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கினை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement