18 வருடம் ஒன்றாக இருந்துள்ளோம். அவர் இல்லை என்று என்று நினைத்தால் வலிக்கிறது – முஸ்பிகுர் ரஹீம்

Mushfiqur 1
- Advertisement -

பங்களாதேஷ் அணியின் கேப்டனும், முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணிக்காக 56 டெஸ்ட் போட்டிகள், 206 ஒருநாள் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தற்போது ஐசிசியின் ஊழல் தடுப்பு நெறிமுறைகளின்படி ஓராண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஷாகிப்பின் இந்த தடை குறித்து அந்த அணியின் சீனியர் வீரரான முஸ்பிகுர் ரஹீம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது : கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் இணைந்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம். அவர் ஓராண்டு விளையாடமாட்டார் என்று நினைத்தாலே எனக்கு வருத்தமாக இருக்கிறது.

கண்டிப்பாக நான் நம்புகிறேன் அவர் மீண்டும் சாம்பியனாக திரும்பி வருவார். நீங்கள் எப்பொழுதுமே எனக்கு சப்போர்ட் செய்துள்ளீர்கள். மேலும் பங்களாதேஷ் அணிக்கும் உங்களது சப்போர்ட் இருந்தே உள்ளது உறுதியாக இருங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவிப்பதுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

Mushfiqur

இந்நிலையில் இந்தத் தடை குறித்து ஷகிப் அல் ஹசன் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் : உண்மையாகவே நான் தடை செய்யப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது. நான் விரும்பும் ஒரு விளையாட்டை பிரிகிறேன் என்பதை நினைக்கும் பொழுது என் மனது மிகவும் கஷ்டப்படுகிறது. இருப்பினும் என் தவறை நான் முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். சூதாட்ட தரகர்கள் என்னை அணுகியது நான் புகார் செய்து இருக்கவேண்டும். ஆனால் அதனை செய்யத் தவறி விட்டேன் இதனால் என் மீது எடுக்கப்பட்ட தண்டனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.

Advertisement