என்னிடம் சொல்லாமலே டிக்ளேர் செய்துவிட்டார்கள். நான் 300 ரன் அடித்திருப்பேன் – வங்கதேச வீரர் அதிருப்தி

Rahim-2
- Advertisement -

ஜிம்பாப்வே அணி தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு சென்று அந்நாட்டிற்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் டெஸ்ட் போட்டியில் பங்காளதேஷ் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 560 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்து அறிவித்தது. வங்கதேச வீரர்கள் மொமினுல் ஹக் 132 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் எடுத்த 203 நாட் அவுட் ஆக இருந்தனர்.

Rahim

ஆனால் முஷ்பிகுர் ரஹிம் இந்த போட்டியில் தொடர்ந்து ஆடியிருந்தால் தான் முச்சதம் எடுத்திருப்பேன் என்று கூறியிருந்தார். இது முஷ்பிகுர் ரஹீமின் 3வது டெஸ்ட் இரட்டைச் சதமாகும், இதில் 2 ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 318 பந்துகள் ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 28 பவுண்டரிகளுடன் 203 நாட் அவுட் என்று இருந்த போது 560/6 என்று டிக்ளேர் செய்யப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசிய வங்கதேச அணியின் வீரரான முஷ்பிகுர் ரஹீமின் கூறியதாவது : டிக்ளேர் செய்யப்போகிறார்கள் என்று என்னிடம் தெரிவிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்னும் கொஞ்சம் பேட்டிங் செய்து இருந்தால் பிட்ச் மேலும் உடைந்திருக்கும். தேனீர் இடைவேளையின் போது கூட டிக்ளேர் பற்றி என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

Rahim 1

நான் பேட்டிங்கை தொடர்ந்து இருந்தால் கண்டிப்பாக முச்சதம் அடித்து இருப்பேன். மேலும் லிட்டன் தாஸ் சதம் அடித்திருப்பார். மற்ற போட்டிகளில் நான் சதம், இரட்டை சதம் அடித்ததைவிட இந்த போட்டியில் அடித்தது சிறப்பாக இருந்தது. பிட்சில் ஒன்றுமே கிடையாது அதனால் என்னால் எளிதாக பந்துகளை அடிக்க முடிந்தது. மேலும் இதுபோன்ற பிட்ச்கள் தான் பேட்ஸ்மேன்களுக்கு பிடிக்கும் எனக்கும் இந்த பிட்ச் கைகொடுத்தது என்று ரஹீம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement