- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்த பணத்தை அவங்களுக்கு நன்கொடையாக தரேன்.. பாகிஸ்தானை வீழ்த்திய ஆட்டநாயகன் ரஹீம் பேட்டி

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 448-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன் பின் பேட்டிங் செய்த வங்கதேசம் அபாரமாக விளையாடி 565 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்தது.

அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை 146 ரன்களுக்கு வங்கதேசம் சுருட்டியது. இறுதியில் 30 ரன்கள் இலக்கை எளிதாக எட்டிப் பிடித்த வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு படைத்தது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு 191 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அனுபவ வீரர் முஸ்பிகர் ரஹீம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

விருது சமர்ப்பணம்:

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த 3 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் பணத்தை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக ரஹீம் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் ரஹீம் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானை வீழ்த்தியது பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “இது என்னுடைய சிறந்த இன்னிங்ஸ். ஏனெனில் வெளிநாடுகளில் நாங்கள் நன்றாக செயல்பட்டதில்லை. எங்கள் அனைத்து வீரர்களும் வங்கதேசத்தில் இத்தொடரில் அசத்துவதற்கான வேலைகளை தொடங்கினர். இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக இரண்டரை மாதங்கள் இடைவெளி இருந்தது”

- Advertisement -

நன்கொடையாக பரிசு:

“சில வீரர்கள் இந்த தொடருக்காக தயாரானார்கள். மற்ற வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடினர். இந்த நேரத்தில் பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுடைய நாட்டுக்காக சிறப்பாக செயல்படுவது எனக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. இந்த நேரத்தில் ஒரு அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன்”

இதையும் படிங்க: மும்பை அணி சூரியகுமார் யாதவை வைத்து அப்படி ஒரு முடிவை எடுக்க வாய்ப்பே இல்லை – வெளியான தகவல்

“எனக்கு கிடைத்த பரிசு தொகையை வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக கொடுக்க விரும்புகிறேன” என்று கூறினார். அவருடைய இந்த அறிவிப்பு வங்கதேச ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக 2001 முதல் விளையாடிய 13 போட்டிகளில் 12 தோல்வி 1 டிராவை சந்தித்த வங்கதேசம் முதல் முறையாக போட்டியில் வென்று வரலாறு படைத்தது. அது அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் மக்களிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -