நான் வாங்கிய இந்த ஆட்டநாயகன் விருதுக்கான மொத்த பணமும் எனக்கு வேண்டாம் – பெரிய மனதை காட்டிய முஷ்பிகுர் ரஹீம்

Rahim
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் 21-ஆம் ஒன்றாம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 25-ஆம் தேதி நேற்று நடைபெற்ற கடைசிநாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.

ஆட்டநாயகன் முஷ்பிகுர் ரஹீம் :

இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கிலும் முன்னிலை வகித்துள்ளது.

- Advertisement -

அதன்படி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான அணி 448 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய வங்கதேச அணி முன்னணி ஆட்டக்காரரான முஷ்பிகுர் ரஹ்மானின் மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக 565 ரன்கள் குவித்தது.

பின்னர் 117 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 146 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 30 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 6.3 ஓவர்களில் 30 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 341 பந்துகளை சந்தித்த முஷ்பிகுர் ரஹீம் 22 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 191 ரன்களில் குவித்து ஆட்டமிழந்து இருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே வங்கதேச அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. இந்தியாவின் 48 வருட மோசமான உலக சாதனையை பகிர்ந்த கொண்ட பாகிஸ்தான்

இந்நிலையில் போட்டி முடிந்து தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதுக்கான முழு பணத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களுக்கு வழங்குவதாக அவர் நெகிழ்ச்சி அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வங்கதேச நாட்டில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருந்த வேளையில் அந்த இழப்பிற்கு தான் அளிக்கும் பங்காக இந்த பணம் இருக்கும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement