- Advertisement -
உலக கிரிக்கெட்

19 வருஷமா நேசிச்ச இந்த விஷயத்தில் இருந்து வெளியேறுவது கஷ்டமா இருக்கு – ஓய்வை அறிவித்த முஷ்பிகுர் ரஹீம்

பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற வங்கதேச அணியானது குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இடம் பிடித்திருந்தது. இந்த போட்டியில் வங்கதேச அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வேளையில் தற்போது அந்த அணியின் நட்சத்திர அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹீம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஓய்வை அறிவித்த வங்கதேச அணியின் ஜாம்பவான் :

தற்போது 37 வயதாகும் முஷ்பிகுர் ரஹீம் கடந்த 2005-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக அறிமுகமாகி இதுவரை 94 டெஸ்ட் போட்டிகள், 274 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். வங்கதேச அணிக்காக கடந்த 19 ஆண்டு காலமாக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வந்த அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் டி20 போட்டிகளிலும் விளையாடுவது கிடையாது. எனவே இனிவரும் சில ஆண்டுகள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு சமூக வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

19 ஆண்டுகளாக நான் நேசித்த போட்டியிலிருந்து தற்போது ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு கடினமாக தான் இருக்கிறது. இருப்பினும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெற இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். இதுவரை நடந்த அனைத்திற்கும் கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் ஒரு விடயத்தை மட்டும் முழு மனதுடன் செய்தேன்.

- Advertisement -

அதாவது நான் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் 100% கூடுதலாக அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் விளையாடி உள்ளேன். கடந்த சில வாரங்களாகவே எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இத்தனை ஆண்டு காலமாக என்னுடைய விளையாட்டை ரசித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : முன்னாள் இந்திய வீரரான வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்த டேவிட் மில்லர் – விவரம் இதோ

வங்கதேச அணிக்காக இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 சதம் மற்றும் 49 அரைசதம் என 7795 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முஷ்பிகுர் ரஹீமின் இந்த ஓய்வு முடிவு வெளியானதில் இருந்து அவரது இந்த முடிவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -