94/7 டூ 321 ரன்ஸ்.. 16 ஃபோர்ஸ் 5 சிக்ஸ்.. டெயில் எண்டரிடம் திணறிய கேப்டன் சுப்மன் கில்.. முஷீர் கான் பதிலடி

Musheer Khan
- Advertisement -

இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முதல் ரவுண்டு செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. அதில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதி வருகின்றன. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணிக்கு துவக்க வீரர்கள் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 13, ஜெய்ஸ்வால் 30 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போது களமிறங்கிய இளம் வீரர் முசீர் கான் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் அவருடைய அண்ணன் சர்பராஸ் கான் 9, ரிஷப் பண்ட் 7, நிதிஷ் ரெட்டி 0, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 0, சாய் கிசோர் 1 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

திணறிய கில்:

அதனால் 94-7 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா பி அணி கண்டிப்பாக 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறுபுறம் தொடர்ந்து சவாலை கொடுத்த முசீர் கான் அரை சதமடித்து போராடினார். அவருக்கு எதிர்ப்புறம் ஒன்பதாவது இடத்தில் களமிறங்கிய நவ்தீப் சைனி நிதானமாக விளையாடி கை கொடுத்தார்.

அதைப் பயன்படுத்திய முசிர் கான் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடி சதமடித்து தம்முடைய அணியை சரிவிலிருந்து முழுமையாக மீட்டார். நேரம் செல்ல செல்ல முஷீர் கான் – நவ்தீப் சைனி ஆகியோர் ஜோடி சேர்ந்து சுப்மன் கில் அணிக்கு மிகப்பெரிய சவாலாக மாறினர். மறுபுறம் முஷீர் கானை அவுட்டாக்க முடியாமல் திணறிய கேப்டன் சுப்மன் கில் டெயில் எண்டரான நவ்தீப் சைனியை அவுட்டாக்க பல திட்டங்களை வகுத்தார்.

- Advertisement -

முஷீர் கான் சதம்:

ஆனால் பலமில்லாத அவரது திட்டங்களை எளிதாக உடைத்த நவ்தீப் சைனியும் அரை சதமடித்து சுப்மன் கில்லை திணறடித்தார். அந்த வகையில் அபாரமாக பேட்டிங் செய்து அந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது முசீர் கான் 16 பவுண்டரி 5 சிக்ஸருடன் 181 (373) ரன்கள் விளாசி ஒரு வழியாக ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: ஆஸி மட்டுமல்ல பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசத்துக்கும் இதை தான் செய்வோம்.. ரிஷப் பண்ட் பேட்டி

கடந்த 2024 அண்டர்-19 உலகக்கோப்பையில் அசத்திய முசீர் கான் ரஞ்சிக் கோப்பையிலும் சதங்கள் அடித்து அசத்தினார். அந்த வகையில் இப்போட்டியிலும் சதமடித்த அவர் தம்முடைய அண்ணன் சர்பராஸ் கானுக்கு சவாலை கொடுத்து வருகிறார். இறுதியில் சைனி 56, யாஷ் தயாள் 10 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா பி அணி 321 ரன்கள் குவித்து அசத்தியது. இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement