ரஞ்சிக் கோப்பை ஃபைனலில் அபார சதம்.. சச்சினின் 30 வருட சாதனையை அவர் முன்பே உடைத்த முஷீர் கான்

Musheer Khan 2
- Advertisement -

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 2024 ரஞ்சிக் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. மார்ச் 10ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதி வருகின்றன. அதில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை போராடி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரிதிவி ஷா 46, லால்வானி 37 ரன்கள் எடுத்தனர்.

அத்துடன் கேப்டன் ரகானே போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 111/5 என சரிந்த மும்பையை கடைசி நேரத்தில் சர்துள் தாகூர் அதிரடியாக விளையாடி 75 (69) ரன்கள் குவித்து காப்பாற்றினார். விதர்பா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷ் துபே 3, யாது தாகூர் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய விதர்பா சுமாராக விளையாடி வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

அசத்திய முஷீர் கான்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக சமஸ் முலானி 3, தவால் குல்கர்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதன் பின் 119 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 11, லால்வானி 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த முசீர் கான் மற்றும் கேப்டன் ரகானே ஆகியோர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அதில் 3வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் ரகானே 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய முஷீர் கான் சதமடித்து 136 (326) ரன்கள் குவித்து அவுட்டானார். சர்பராஸ் கான் தம்பியான அவர் 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி நல்ல பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

அதே வேகத்தில் சதமடித்த முஷீர் கான் (19 வருடம் 14 நாட்கள்) ரஞ்சிக் கோப்பை வரலாற்றின் ஃபைனலில் மிகவும் இளம் வயதில் சதமடித்த மும்பை வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 30 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 1994/95 ஃபைனலில் பஞ்சாப்புக்கு எதிராக சச்சின் தன்னுடைய 22வது பிறந்தநாளில் சதமடித்து மும்பையை வெற்றி பெற வைத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: அந்த இந்திய வீரரை சமாளிக்க முடியல.. கோலி இருந்திருந்தா 5 – 0ன்னு தோத்துருப்போம்.. இங்கிலாந்தை விளாசிய ஃபாய்காட்

அப்படி தம்முடைய சாதனையை உடைத்த முசீர் கானை இப்போட்டியை வான்கேடே மைதானத்திலிருந்து நேராக பார்த்த சச்சின் டெண்டுல்கர் கைதட்டி பாராட்டினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் எதிர்ப்புறம் சற்று அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் சதத்தை நழுவ விட்டு 95 (111) ரன்கள் ஆட்டமிழந்தார். அதனால் 3வது நாள் தேனீர் இடைவேளையில் 356/7 எடுத்துள்ள மும்பை 476 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது.

Advertisement