அந்த இந்திய வீரரை சமாளிக்க முடியல.. கோலி இருந்திருந்தா 5 – 0ன்னு தோத்துருப்போம்.. இங்கிலாந்தை விளாசிய ஃபாய்காட்

Geoferry Boycott 4
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக பஸ்பால் அணுகு முறையை பயன்படுத்தி டி20 போல அதிரடியாக விளையாடுவோம் என்று சொன்ன இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று முன்னிலை பெற்றதால் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த நான்கு போட்டிகளிலும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்த அந்த அணி கடைசியில் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இங்கிலாந்து அணியின் பஸ்பால் அணுகுமுறை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

- Advertisement -

ஆண்டர்சனை அனுப்புங்க:
இந்நிலையில் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தவறிய ஜேம்ஸ் ஆண்டர்சனை காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து கழற்றி விடுமாறு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் விமர்சித்துள்ளார். அத்துடன் குல்தீப் யாதவை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இருந்திருந்தால் 5 – 0 என்ற கணக்கில் இன்னும் படுமோசமான தோல்வியை சந்தித்திருக்கலாம் என்றும் பாய்காட் சாடியுள்ளார்.

இது பற்றி ஃடெலிகிராப் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அனுபவமற்ற இங்கிலாந்து குழந்தை பேட்ஸ்மேன்கள் அனுபவம் மிகுந்த இந்திய ஸ்பின்னர்களை எப்போதும் பின்தங்க வைக்கப் போவதில்லை. ஒருவேளை அதைப்பற்றி யாரேனும் நினைத்தால் அது முட்டாள்தனமான சிந்தனை. விராட் கோலி இந்த தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். கே.எல். ராகுலும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார்”

- Advertisement -

“தொடர் முடிவிலும் கூட மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப் யாதவை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் படிக்க முடியாமல் திணறியதை எனக்கு வியப்பைக் கொடுத்தது. 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகள் தொட்டதற்காக ஜேம்ஸ் ஆண்டர்சன் அனைத்து பாராட்டுகளுக்கு தகுதியானவர். ஆனால் அவருடைய வயது காரணமாக அவர் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறார். எனவே இங்கிலாந்து அவரை எப்போதும் பருத்தி கம்பளியில் போர்த்தி சென்டிமென்ட் அடிப்படையில் தேர்ந்தெடுக்க முடியாது”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை அவங்க 2 பேர் தான் முடிவு செய்வாங்க – காசி விஸ்வநாதன் தகவல்

“ஏனெனில் அடுத்த ஒன்றரை வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் தொடரை வெல்வது நமக்கு காத்திருக்கும் சவாலாகும். எனவே உங்களுடைய நினைவுகளுக்கு நன்றி ஜேம்ஸ் ஆண்டர்சன் என்று சொல்லி நாம் நகர வேண்டும். பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் நிறைய பாடம் கற்றதாக சொன்னார். அதை நான் ஏற்கவில்லை. தற்போது அவர்கள் மீண்டும் சொந்த மண்ணுக்கு சென்று இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற சுமாரான அணிகளை தோற்கடிப்பார்கள். இந்தியாவிடம் சந்தித்த தோல்வியை மறந்து விடுவார்கள்” என்று கூறினார்.

Advertisement