DC vs KXIP : மீண்டும் பஞ்சாப் அணி போட்டியின்போது அம்பயரால் வந்த சர்ச்சை – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

Murugan
- Advertisement -

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி வீரரான முருகன் அஸ்வின் 7 ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வீச நினைத்த அஸ்வின் வீசும்போது பந்து கை நழுவி பந்தை அவரின் அருகிலே பாதி பிட்சில் வீசினார். அந்த பந்தினை டெட் பால் என்று கூறி மீண்டும் வீசவைப்பது தான் வழக்கம் ஆனால், அம்பயர் அந்த பந்தினை நோபால் என்று அறிவித்து பிரீ ஹிட் வேறு கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கோவமடைந்த்தார். அம்பயரின் இந்த செயல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த விவகாரம் தற்போது சர்சையையாகி உள்ளது. நியாயமாக அந்த பந்தினை டெட் பால் என்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பந்தினை கை சுற்றி முருகன் அஸ்வின் வீசியதால் அந்த பந்தினை நோபால் என்று அறிவித்ததாக அம்பயர் கூறினார்.

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

- Advertisement -

Iyer

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 37 பந்துகளில் 69 ரன்களையும், மந்தீப் சிங் 30 ரன்களையும் குவித்தனர். சந்தீப் சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை அடித்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களையும், தவான் 56 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானார்.

Advertisement