- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இது ஒன்னும் அவ்ளோ ஈஸி கிடையாது.. உங்களால் இந்தியாவுக்கே பெருமை.. அஷ்வினை வாழ்த்திய – முரளிதரன்

இந்திய அணியின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி முடிவடைந்த கையோடு சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

அஷ்வினை வாழ்த்திய முத்தையா முரளிதரன் :

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய அஷ்வினுக்கு சென்னையில் பிரமாதமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரரான அவருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே பல முன்னணி வீரர்கள் பாராட்டிய வேளையில் :

- Advertisement -

தற்போது இலங்கையை சேர்ந்த முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்படி ஒரு சாதனையை எட்டிப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது.

அஸ்வின் தற்போது தமிழ்நாட்டை மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே பெருமையடையச் செய்திருக்கிறார். அவரது கிரிக்கெட் கரியர் போலவே தற்போது அவர் துவங்க இருக்கும் இரண்டாவது இன்னிங்சிலும் எல்லாவற்றையும் பெறுவார் என்று வாழ்த்துகிறேன். அஸ்வின் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மனாக தனது கரியரை துவங்கினார். ஆனால் தற்போது முழுநேர சுழற்பந்து வீச்சாளராக இப்படி ஒரு சாதனையோடு அவரது கரியரை முடித்திருக்கிறார். இப்படி ஒரு பயணம் மிக எளிதான ஒன்று கிடையாது.

- Advertisement -

நான் எனது கிரிக்கெட் கரியரின் இறுதி கட்டத்தில் இருந்த போதுதான் அவரை முதல் முறையாக சந்தித்தேன். அப்போதே அவர் ஒரு புத்திசாலி தனமான இளைஞனாக இருந்தார். அவரிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகம் இருந்தது. என்னிடம் கிரிக்கெட் குறித்த நிறைய ஆலோசனைகளையும், கேள்விகளையும் அவர் முன் வைப்பார். அப்போது இளைஞனாக நான் அவரை எப்படி பார்த்தேனோ தற்போதும் அப்படியே பார்க்கிறேன்.

இதையும் படிங்க : அந்த 2 இந்திய வீரர்களை டார்கெட் செய்தோம்.. ஆனா மிஸ் ஆயிடுச்சி – ஆர்.சி.பி அணியின் இயக்குனர் தகவல்

தனது கரியரின் கடைசி கட்டத்தில் அவர் இருந்த போதும் ஒரு இளைஞனைப் போல கடைசி நேரத்திலும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் புதிய புதிய விடயங்களை முயற்சி செய்து கொண்டே இருந்தார். நிச்சயம் அஸ்வினுடைய எதிர்காலம் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைப்பதாக முரளிதரன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -