விஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க – முரளிதரன் ஓபன் டாக்

Muralitharan-1

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படம் தற்போது தயாராகி வருகிறது. இவர் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழர் என்பதால் இந்த படத்தினை தமிழக திரைக் கலைஞர்களை வைத்து எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆகவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

vijay sethupathi

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது 800 என்று இந்த படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரன் மொத்தம் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அதனை காட்டும் வகையில் அவரது படத்திற்கு இந்த தலைப்பு தேர்வு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து தற்போது பேசியிருக்கிறார் முத்தையா முரளிதரன் அவர் கூறுகையில் :

800 படம் என்பது மிகவும் வேகமான வித்தியாசமான வாழ்க்கை வரலாற்று படமாகும். கிரிக்கெட் மற்றும் சொந்த வாழ்க்கை ஆகிய இரண்டையும் எவ்வாறு முத்தையா முரளிதரன் கையாண்டிருக்கிறார் என்பது குறித்து இதில் தெளிவாக பேசி இருக்கிறோம். இந்த கதை தயாரானதும் படத்திற்கு சிறந்த கதாநாயகன் யார் என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.

Vijay-sethupathi-1

அப்போது விஜய்சேதுபதியை தவிர வேறு ஒருவர் இதனை சரியாக செய்ய முடியாது என்றும் நினைத்து விட்டோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என்னைப்போன்ற அவரால் மிகச் சிறப்பாக நடிக்க முடியும். அவரைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை யாராலும் செய்ய முடியாது
அவரை நான் முழுமையாக நம்புகிறேன்.

- Advertisement -

muralitharan

நிச்சயமாக இந்த படத்தில் என் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்து சிறப்பாக நடித்துக் கொடுப்பார் என்று நினைக்கிறேன். அவர் நிச்சயமாக படத்திற்காக அதிசயங்களை செய்வார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது இவ்வாறு தெரிவித்திருக்கிறார் முத்தையா முரளிதரன்.