ஐ.பி.எல் தொடரில் எனக்கு பிடித்த அணி இதுதான். அந்த அணியில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி – முரளிதரன் ஓபன் டாக்

Muralitharan
- Advertisement -

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், பௌலிங் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடி பின்னர் ஓய்வு பெற்றார். 2008 ஆம் ஆண்டு முதல் முறை அவர் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்ட போது அவருக்கு ஏனோ தொகையாக 4.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

muralitharan

- Advertisement -

தொடர்ந்து மூன்று சீசன்கள் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முரளிதரன் 2011ஆம் ஆண்டு கேரளா கொச்சி டஸ்ர்கஸ் அணிக்காக விளையாடினார். பின்பு அடுத்த ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடி அதன் பின்னர் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் உடன் தொடர்பில் இருக்கும் முரளிதரன் சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனக்கு மிகவும் பிடித்த ஐபிஎல் அணி குறித்து மனம் திறந்து அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் : சென்னை அணிக்கு 3 ஆண்டுகள் விளையாடினேன். மேலும் சென்னை அணியில் நான் தேர்வாக வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் வேண்டிக்கொண்டேன்.

Muralitharan

ஏனெனில் சென்னையில் நிறைய வீரர்கள் தமிழ் பேசும் வீரர்கள் இருப்பதால் அவர்களுடன் நன்கு பேசி பழக முடியும். மேலும் சென்னை எனக்கு பிடித்த ஊர் என்பதன் காரணமாகவே சென்னை அணியில் நான் தேர்வாக நினைத்தேன். அதற்கேற்றார்போல் சென்னை அணிக்காக மூன்று ஆண்டுகள் நான் விளையாடி விட்டேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் நான் 6-7 ஆண்டுகளாக பல அணிகளுக்கு பயிற்சி அளித்திருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகச் சிறந்த அணியாக பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் பிடித்த அணி என்று கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை அவர் 40 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியூள்ளது குறிப்பிடத்தக்கது.

Muralitharan 2

2008 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய சென்னை அணியில் இவர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனோ வைரசால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் தள்ளிப் போய் உள்ளதால் இந்த ஓய்வு நேரத்தில் ஐபிஎல் குறித்த பல தகவல்களை பல முன்னாள் வீரர்களும் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது முரளிதரன் அளித்துள்ள இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement