அந்த பவுலரை டி20 உலகக்கோப்பையில் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது ரொம்ப கஷ்டம் – முரளிதரன் எச்சரிக்கை

Muralitharan
Advertisement

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இத்தொடரில் பங்கேற்பதால் கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குதித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Worldcup

மேலும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்தால் அனைத்து நாடுகளுமே தற்போது அவர்களது அணியை தேர்வு செய்து அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணி பலமாக இருக்கும்? எந்த அணி இறுதி போட்டி வரை முன்னேறும்? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்?

- Advertisement -

எந்த பேட்ஸ்மேன் அதிக ரன்கள் குவிப்பார்? எந்த பவுலர் அதிக விக்கெட் எடுப்பார்? என பல்வேறு விதமான விவாதங்கள் சமூக வலைதளத்தில் எழுந்து வருகின்றன. அதோடு இந்த விவகாரங்கள் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறந்த பவுலராக எந்த வீரர் வருவார் என்பதை குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

hasaranga 2

இது குறித்து அவர் கூறுகையில் : நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த வனிந்து ஹசரங்கா இந்த உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஹசரங்கா மிகச்சிறந்த டி20 பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது மற்ற ஸ்பின்னர்களை விட ஆஸ்திரேலியா மண்ணில் அவருக்கு இன்னும் சாதகம் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர் பந்து வீச வரும்போது பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் அவரை கையாள வேண்டும்.

இதையும் படிங்க : அவர் பார்ம் அவுட்டே ஆகல, இந்திய வீரரை பாராட்டும் வெ.இ வீரர் – ஆனால் விராட் கோலியை அல்ல

ஆஸ்திரேலிய மைதானங்களில் நிச்சயம் அவருக்கு நல்ல சாதகம் கிடைக்கும். எனவே என்னை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில் அவரே இந்த டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என நம்புவதாக முரளிதரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement