அவர் பார்ம் அவுட்டே ஆகல, இந்திய வீரரை பாராட்டும் வெ.இ வீரர் – ஆனால் விராட் கோலியை அல்ல

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக தயாராகி வந்த இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்களால் தனக்கு தானே தோல்வியை பரிசளித்துக் கொண்ட அந்த தவறுகளை திருத்துவதற்கு அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்களில் களமிறங்க தயாராகி வருகிறது. முன்னதாக ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியடைந்தாலும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்கக் கோரும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து பார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

Virat Kohli

- Advertisement -

ஏனெனில் கடந்த 10 வருடங்களாக 24000 ரன்களையும் 71 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ள அவருடைய பார்ம் உலக கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்வதற்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் நவீன கிரிக்கெட்டில் இந்திய அணியின் இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஒரு குழலாக கருதப்படும் விராட் கோலி பார்முக்கு திரும்பினாலும் மற்றொரு குழலாக கருதப்படும் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது.

சுமாரான பார்மில்:
ஏனெனில் கடந்த 2013இல் தொடக்க வீரராக களமிறங்கியது முதல் எதிரணிகளை பந்தாடி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ரசிகர்களால் ஹிட்மேன் என்று போற்றப்படும் அவர் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் அதே பழைய பன்னீர்செல்வமாக பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். ஆரம்ப காலங்களில் சாதாரண வீரராக சுதந்திர பறவையாக விளையாடிய அவர் தற்போது தடுமாற கேப்டன்ஷிப் அழுத்தமே காரணம் என்று தெரிவித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் சோயப் அக்தர் அதன் காரணமாக இந்த பதவியில் அவரால் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்றும் கூறியிருந்தனர்.

Rohit-and-Kohli

அவர்கள் கூறுவது போல பெரும்பாலான போட்டிகளில் அதிரடியான தொடக்கத்தை பெறும் ரோகித் சர்மா அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் அவுட்டாவதை பார்க்கும்போது கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பார்ம் அவுட்டாகி விட்டாரோ என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களிடமும் காணப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா எப்போதும் பார்ம் அவுட்டாகவில்லை என்று தெரிவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரேன் எப்போதும் அவர் மேட்ச் வின்னர் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் தரமான வீரர். அவருடைய திறமையில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஒருமுறை செட்டிலாகி பேட்டிங்கை தொடங்கி விட்டால் அவர் பார்ப்பதற்கு சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார். அவர் எப்போதும் பார்மில் உள்ளவர். ரன்கள் அடிக்கிறாரா இல்லையா என்பதைத் தாண்டி அவர் பார்ம் அவுட்டாகி விட்டதாக தன்னை காட்சிப்படுத்தியதில்லை. இந்தியாவின் கேப்டனாக நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவருடைய ஐபிஎல் சாதனைகளும் நன்றாக உள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக தலை மற்றும் தோள் பட்டைகளை கொண்டுள்ள அவர் வெற்றிகளை பெற்று கொடுப்பவர்” என்று கூறினார்.

narine

அதே போல் விராட் கோலியும் பார்ம் அவுட்டானத்தில்லை என்று தெரிவிக்கும் அவர் சதமடிக்கவில்லை என்பதற்காக பார்ம் அவுட்டாகி விட்டார் என்ற பிம்பத்தை வெளியில் இருப்பவர்கள் தான் ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “விளையாட்டில் இதுவும் ஒரு அங்கமாகும். அதிலும் அவரைப் போன்ற ஒருவர் நீண்ட காலம் சிறப்பாக செயல்பட்டு விட்டு அப்படி ஒரு நிலைமையில் தவித்த போது இவ்வாறு நடப்பது சகஜமாகும். உலகில் மிகச் சிறந்த தரமான வீரரான அவர் எப்போதுமே முன்பை விட சிறப்பாக கம்பேக் கொடுப்பவர்”.

இதையும் படிங்க : பிசிசிஐ மீது கோபத்தில் ரசிகர்கள் – தொடர் புறக்கணிப்பு பற்றி முதல் முறையாக மௌனம் கலைத்த சாம்சன் பேசியது இதோ

“ஆனால் மக்கள் இவ்வாறு பேசுவது சகஜமானது. அவர்கள் நீங்கள் சிறப்பாக செயல்படும் போது உங்களில் யார் சிறந்தவர் யார் சிறந்தவர் அல்ல என்பதை ஒப்பிட முயற்சிப்பார்கள். இருப்பினும் ஒவ்வொரு வீரரும் வெளியிலிருந்து பேசுபவர்களை விட அவர்களது வழியில் அவர்களது நாட்டுக்காக விளையாடும் உரிமை பெற்றுள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement