டெல்லி அணியோட அதே டெக்னிக் யூஸ் பண்ணி நாங்க கோப்பையை ஜெயிப்போம் – முரளிதரன் பேட்டி

Muralitharan-1
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

SRH

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற டெல்லி, பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இம்முறை கோப்பையை கைப்பற்றுவதற்காக மும்முரம் காட்டும். அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி நிறைய இளம் வீரர்களை கொண்டுள்ளதால் அந்த அணி நிச்சயம் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு டெல்லி அணி ஐயரின் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு அந்த அணி பல இளம் இந்திய வீரர்களை எடுத்து இருப்பதால் அவர்களது பலத்தை முழுவதுமாக காண்பிக்க உள்ளனர். மேலும் டெல்லி அணியில் தரமான வீரர்கள் இருப்பதால் அந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான முரளிதரன் இந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் செயல்பாடு குறித்து கூறுகையில் தெரிவித்ததாவது :

srh

டெல்லி அணியை போன்று எங்களது அணியிலும் நிறைய திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இம்முறை நடைபெற இருக்கும் தொடரில் பல மாறுதல்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து விளையாடினால் நிச்சயம் பெரிய மாற்றம் நிகழும்.

Warner

எனவே அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் ஆகிய கலவைகளில் வீரர்களை இறக்க உள்ளோம். நிச்சயம் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது என்று முரளிதரன் நம்பிக்கை தெரிவித்தார். இம்முறை சன்ரைஸ் அணியில் இளம் வீரர்களாக அப்துல் சமத், அபிஷேக் வர்மா, சஞ்சய் யாதவ், பிரியம் கார்க், கலீல் அகமது போன்ற பல வீரர்களை அந்த அணி ஏலம் எடுத்துள்ளது. செப்டம்பர் 21-ம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் லீக் போட்டியை சன்ரைசர்ஸ் அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement