இலங்கையில் ஐ.பி.எல் நடந்த என்ன ஆகும். கடைசில இதான் நடக்கும் – கரெக்ட்டான பாயின்டை சொன்ன முரளிதரன்

Muralitharan

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளின் ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்று வரும் ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

IPL-1

அதன் பிறகு தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறையாததால் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஐபிஎல் நடத்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்தில் தற்போது இந்தியாவின் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

- Advertisement -

இந்திய அரசாங்கம் வழங்கும் அறிவுரைப்படி இந்தியாவில் கிரிக்கெட் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐபிஎல் குறித்து யோசிக்க போவதில்லை என்றும் அதுவரை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஐ.பி.எல் நடத்தலாம் என்று பலரும் யோசனை கூறிவருகின்றனர்.

CskvsMi

இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணி வாரியத்தின் தலைவர் ஷமி செல்வா கூறுகையில் இலங்கை இந்தியாவிற்கு முன்னதாக கொரோனா வைரஸ் தாக்கத்தில் மீண்டு விடும் என்பதனால் இங்கே கிரிக்கெட் போட்டிகளை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் .இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனால் இலங்கை நாடு முன்வந்து ஐபிஎல் நடத்த தயாராக உள்ளதாகவும் எனவே ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தாமல் இலங்கையில் நடத்துமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் .ஆனால் இதுகுறித்து பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். மேலும் தற்போதுள்ள சூழலில் மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

murali

இந்நிலையில் இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் முத்தையா முரளிதரன் அளித்துள்ள கருத்தில் கூறியதாவது : ஐபிஎல் போட்டிகளில் இலங்கை யில் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே இருக்கிறது. எனக்கு தெரிந்து இது ஒரு நிரந்தரத் தீர்வாகாது. ஏனெனில் கொரோனா வைரஸ் பாதிப்பு களை உலகெங்கிலும் நீக்க வேண்டும். அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையில் போட்டி நடந்தால் விளையாட்டு வீரர்கள் இங்கு வருவார்கள் அவர்களை இங்கு தனிமைப்படுத்த வேண்டும். இது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement