என்னுடைய கிரிக்கெட் கேரியரில் என்னை அச்சுறுத்திய 2 பேட்ஸ்மேன்கள் – முரளிதரன் ஓபன்டான்

Muralitharan
- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இலங்கை அணியின் ஜாம்பவான் முரளிதரன். அவர் விளையாடிய காலத்தில் பல ஜாம்பவான்களுக்கு எதிராக வீசிய உள்ள அனுபவம் உடையவர். இந்நிலையில் தனது கிரிக்கெட் கேரியரில் பந்துவீச கடினப்பட்ட பேட்ஸ்மேன்கள் குறித்து மனம்திறந்த பேட்டி ஒன்றினை முரளிதரன் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சச்சின் டெண்டுல்கர் என்னுடைய சுழற்பந்து வீச்சை மிக சாதாரணமாக கணித்து எளிதாக விளையாட விடுவார்.

Muralitharan

- Advertisement -

ஆனால் ராகுல் டிராவிட்டால் அதேபோன்று கணிக்க முடிந்தது இல்லை. அது மட்டுமின்றி இந்திய வீரர்களான கௌதம் கம்பீர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் என்னுடையவை தூஸ்ரா பந்தினை அற்புதமாக கணித்து விளையாடுவார்கள். இந்திய வீரர்களில் இவர்கள் என்னுடைய பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்ட வீரர்கள் என்று குறிப்பிட்டார். அதன் பின்பு தொடர்ந்து பேசிய அவர் :

என்னுடைய கேரியரில் என்னை அச்சுறுத்திய பேட்ஸ்மேன்கள் என்றால் அது இரண்டு வீரர்கள் தான். அந்த இரண்டு வீரர்கள் யாரெனில் லாரா மற்றும் சேவாக் தான். அவர்கள் இருவருமே என்னுடைய பந்தினை கணித்து விளையாடியது போன்று எனக்கு தெரிந்தது இல்லை. ஆனாலும் எந்தவித பயமுமின்றி என் பந்துகளை அவர்கள் அடித்து விளையாடுவார்கள். 99 ரன்கள் எடுத்த ஒரு வீரர் சிங்கிள் அடித்து சதம் அடிக்க வேண்டும் நினைப்பார்.

Sehwag

ஆனால் சேவாக் அப்படியல்ல. எந்த நேரத்திலும் பவுண்டரி, சிக்சர்கள் அடிக்க நினைப்பார். அதேபோன்றுதான் ஒரு முறை இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 293 ரன்கள் எடுத்திருந்த போதும் கூட 300 ரன்களை கடக்க நினைத்து விளையாடாமல் சிக்ஸர் அடிக்க முற்பட்டு என்னுடைய ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார் என அந்த பேட்டியில் முரளிதரன் கூறியுள்ளார்.

Dhoni

மேலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ்க்கு முன்னர் தோனி களம் இறங்க என்ன காரணம் என்று பேசிய அவர் : அப்போது சென்னை அணியில் தோனியும் நானும் ஒன்றாக விளையாடி வந்ததால் என்னுடைய பந்துவீச்சை அவர் வலைப்பயிற்சியில் எதிர்கொண்டுள்ளார். ஆனால் யுவராஜ் என்னுடைய பந்துவீச்சை அவ்வளவாக எதிர்கொண்டதில்லை இதன் காரணமாகவே யுவ்ராஜ்க்கு முன்னதாக தோனி களம் இறங்கி இருக்கலாம் என்று தான் நினைப்பதாக முரளிதரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement